Published:Updated:

007 படத்தில் சானியா மிர்சா!

007 படத்தில் சானியா மிர்சா!
007 படத்தில் சானியா மிர்சா!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா 2003ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை மகளிர் டென்னிஸ் சங்கத்தால் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை என தரவரிசைப்படுத்தப்பட்டவர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சொயப் மாலிக்கை காதலித்து திருமணம் புரிந்தார். டென்னிஸில் பல சாதனைகளை புரிந்த சானியா தற்போது சினிமா உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

007 படத்தில் சானியா மிர்சா!

ஆனால் இந்திய படங்களில் இல்லை ஹாலிவுட்டில். ‘ஸ்கைஃபால்’ படத்திற்கு பிறகு அடுத்து பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பாண்ட் 24’ படத்தில் நடித்து வருகிறார் சானியா மிர்சா. 

இது குறித்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் தினந்தோறும் பகிர்ந்து வருகிறார்.அவதார் பாண்டிங், அட் தி ஷுட்டிங். பாண்டிங் வித் பாண்ட் . என மிர்சாவின் பாண்ட் 24 பற்றிய செய்திகள் தற்போது இணையத்தையும் கலக்கி வருகிறது.