Published:Updated:

இது மொக்க பட அவார்டு!

Vikatan Correspondent
இது மொக்க பட அவார்டு!
இது மொக்க பட அவார்டு!
ஹாலிவுட்டில் எப்படி மிக சிறந்த படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் அறிவிக்க படுகிறதோ அதே பாணியில் மிக மொக்கை படம், மிக மொக்கை நடிகர்கள் என்ற பாணியிலும் விருதுகள் வழங்க படுகின்றன. கோல்டன் ராஸ்பெர்ரி  எனப்படும் இந்த விருதுகள் இந்த வருடமும் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த விருது பட்டியலில் மிகப்பெரிய படங்களும் அடக்கம் என்பதுதான் சிறப்பே. இதோ 2013ம் ஆண்டு வெளியான படங்களில் மொக்கை விருதுகள் பெற்ற லிஸ்ட்.
 
சிறந்த மொக்கை படம்: மொக்கைகளிலேயே சிறந்த மொக்கை படமாக இந்த வருடம் தேர்வாகியிருப்பது ‘Movie 43' படம் . இந்த படம் முழுவதும் லாஜிக் இல்லை, நடிகர்கள் சரியான நடிப்பை வெளிப்படுத்தவில்லை, ஸ்க்ரீன் ப்ளே மொக்கை என்ற ரீதியில் இந்த படத்திற்கு தங்க பெயிண்ட் அடித்த ரேஸ்பெர்ரி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நாமினேஷனில் கடும் போட்டியை உருவாக்கிய மொக்கை படங்கள்  ‘After Earth' , ' The Lone Ranger', 'Grown Ups 2' ,'A Madea Christmas' . 
 
 
 
சிறந்த மொக்கை ஹீரோ: 'After Earth' படத்தின் நாயகன் ஜேடன் ஸ்மித்துக்கே இந்த உயரிய விருது. கிடாய் ரைகி கேரக்டரில் நடித்த ஜேடன் சில இடங்களில் சரியான உணர்வுகளை வெளிபடுத்த வில்லை. கதைக்கு ஏற்ற சரியான தேர்வு நாயகன் இல்லை என்ற வகையில் இவருக்கு அளிக்கப்பட்டது.இந்த விருதில் கடும் போட்டிகளை உருவாக்கியவர்கள் ' The Lone Ranger', படத்தின் நாயகன் ஜானி டெப், ’Jobs' படத்தின் நாயகன் ஆஷ்டன் கட்சர்,  ’Grown Ups 2’  படத்தின் ஆடம் சாண்ட்லர், ’Bullet to the Head’, ’Escape Plan’ மற்றும் ‘Grudge Match’ படங்களுக்காக சில்வஸ்டர் ஸ்டோலின் . அவருக்கேவா?.
 
 
சிறந்த மொக்கை நடிகை : ’A Madea Christmas’ படத்தில் நடித்த டைலர் பெர்ரிக்கு தான் மொக்கை நடிகை விருது தரப்பட்டது. பாட்டியாக நடித்திருக்கும் டைலர் இந்த படத்திற்கு முக்கியமான ஒன்றே செண்டிமெண்ட் அதை துளியும் வெளிபடுத்தாமல் வந்து போவதாக விமர்சனங்கள் தாக்கியுள்ளன. இப்போது கை மேலே இந்த மொக்கை விருதும். இவருக்கு டஃப் கொடுத்த நாமினி வாளாக்கள் ’The Call’, ’Movie 43’ படங்களின் நாயகி  ஹால்லே பெர்ரி, ’Getaway’ படத்தின் செலினா கோம்ஸ், ’The Canyons’  படத்தின் லிண்ட்சே லோகன் , ’Diana’ மற்றும் ’Movie 43’ படங்களின் நாயகி நவோமி வாட்ஸ். 
 
இவை தவிர்த்து சிறந்த மொக்கை குணச்சித்திர நடிகராக ’After Earth' படத்திற்காக வில் ஸ்மித்துக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அட ஒரே வீட்ல ரெண்டு மொக்கை விருது. சிறந்த மொக்கை குணச்சித்திர நடிகையாக கிம் கர்தாஷியனுக்கு ’Tyler Perry's Temptation’ படத்திற்காக அளிக்கப்பட்டுள்ளது.மொக்கை இயக்குனராக தேர்வாகியிருப்பவர்கள் ஒரு 13 பேர் கொண்ட குழு. இவங்க 13 பேரும் இணைந்து ‘மூவி 43’ என்ற படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த விருத வாங்கவா இவ்வளவு அரும்பாடு .சூப்பர் ஜி! சூப்பர் ஜி ! 
இது மொக்க பட அவார்டு!
 
மொக்கை திரை ஜோடியாக  ‘After Earth' படத்தின் அப்பா பையன்  வில் ஸ்மித் மற்றும் ஜேடன் ஸ்மித் பெற்றுள்ளனர். மூணாவது விருதுமா? ரொம்ப கடின உழைப்பா தெரியுது. சிறந்த மொக்கை திரைக்கதையாக ‘மூவி 43’ தேர்வாகியுள்ளது. மற்றும் மொக்கை ரீமேக் படமாக ’தி லோன் ரேஞ்சர்’ படமும் வென்றுள்ளது.  இதில் அதிக விருதுகள் ‘மூவி 43’ மற்றும் ‘ஆஃப்டர் எர்த்’ படங்களுக்குத் தான் .  
 
இப்படி ஒரு விருத மட்டும் நம்ம ஊர்ல அறிவிச்சா அந்த மொத்த வித்தைய கொட்டுன படத்துக்குத்தான் அத்தனை விருதும் கிடைக்குமோ? 
 
- ஷாலினி நியூட்டன் -