Published:Updated:

கோலிசோடா படத்தின் சம்பளம் தான் விக்ரம் படம் - விஜய் மில்டன் !

Vikatan Correspondent
கோலிசோடா படத்தின் சம்பளம் தான் விக்ரம் படம் - விஜய் மில்டன் !
கோலிசோடா படத்தின் சம்பளம் தான் விக்ரம் படம் - விஜய் மில்டன் !

கோயம்பேடு மார்கெட்டின் மூட்டை தூக்கும் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘கோலி சோடா’. 2014ல் நடந்த பல உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டும், விருதுகளை பெற்றும் வந்துள்ளது இந்த படம். 

படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் அடுத்து விக்ரம் நடிக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தை இயக்கி வருகிறார். படத்தில் விக்ரமுடன் இணைந்து பணிபுரிவது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் விஜய் மில்டன். அவர் கூறுகையில், 

'கோலிசோடா' தேடிக் கொடுத்த வாய்ப்புதான் இந்தப்படம். வேறு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால் கோலி சோடாவின் சம்பளம்தான் இந்தப்படம்.முதலில் அவர் ஒப்பந்தமானதே சுவாரஸ்யமானது. 'கோலிசோடா' படத்தை சத்யம் திரையரங்கில் பார்த்து விட்டு போன் செய்து பாராட்டினார்.

எனக்கு ஏதாவது கதை இருக்கிறதா என்றார்.ஒன் லைன் சொன்னேன். உடனே கூப்பிட்டார். அப்போது இரவு 10 மணி. வரச்சொன்னார். போய்ச கதை சொன்னேன். உடனே ஓகே செய்தார். அந்தப்படம்தான் '10 எண்றதுக்குள்ள' .கதை சொல்லி '10 எண்றதுக்குள்ள' படத்தைவிக்ரம் முடிவு செய்தார்.

அவர் எவ்வளவு பெரிய நடிகர்.ஆனால் எல்லாவற்றையும் மறந்து தன்னை ஒப்படைப்பவர். அவ்வளவு ஊக்கம், அர்ப்பணிப்பு உள்ளவர். முதல்படம் மாதிரி நினைத்து நடிப்பவர். 15 வயது பையன் போல இயங்குபவர். முருகதாஸ் சாரின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது