Election bannerElection banner
Published:Updated:

இனி.. இனியா !

இனி.. இனியா !
இனி.. இனியா !

இனி.. இனியா !

2008ம் ஆண்டு வெளிவந்த 'பொம்மலாட்டம்' படத்தினை அடுத்து தற்போது தான் பாரதிராஜா தனது அடுத்த படத்திற்கான வேலைகளை துரிதப்படுத்தி வருகிறார்.

படத்திற்கு 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' என்று தலைப்பிட்டு இருக்கிறார். பார்த்திபன் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். மீனாள் ஒரு நாயகியாகவும், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள்.

பாரதிராஜா படம் என்றாலே நாயகி யார் என்பது தான் கோடம்பாக்கத்தின் பேச்சாக இருக்கும். அதற்கு இப்படமும் தப்பவில்லை.

தான் அறிமுகம் செய்த ப்ரியாமணியை இப்படத்தின் நாயகி ஆக்கலாம் என்று முடிவு எடுத்தாராம் பாரதிராஜா. ஆனால் தெலுங்கு திரையுலகில் தற்போது கிளாமர் வேடங்களில் நடித்து வருவதால் கிராமத்து பாத்திரத்திற்கு அவர் சரி வருவாரா என்று யோசித்தாராம்.

இந்நிலையில் 'வாகை சூட வா' படத்தில் இனியாவின் நடிப்பை பார்த்து வியந்தவர், 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' படத்தின் முக்கிய நாயகியாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்.

முதல் படத்தில் கிடைத்த வரவேற்பு, தற்போது பாரதிராஜா படத்தின் நாயகி என இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார் இனியா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு