Published:Updated:

ஜெமினி மகன் ஹீரோ..!

Vikatan Correspondent

தமிழ் திரையுலக நாயகன், நாயகி வாரிசுகள்  ஜெயிப்பதும் தோற்பதும் அவரவர் திறமையையும் அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது.

தற்போது அவ்வரிசையில் அறிமுகமாகி இருக்கிறார் அபிநய். இவர் ஜெமினி கணேசன், சாவித்ரியின் வாரிசு. இவர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படம் 'வினை'. ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்தில் அறிமுகமாகி  இருந்தாலும் தமிழில் வெளிவரப் போகும் முதல் படம் 'வினை'.

இசைக்குழு வைத்திருக்கும் நால்வர் ஒரு பாடகியுடன் மலேசியா செல்கிறார்கள். சில தினங்களில் இந்த நால்வரும் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். கொல்வது யார்? ஏன்? என்ற கதையை தான் விறுவிறுப்பாக கூறி இருக்கிறார்களாம்  'வினை' படத்தில்.

இந்த படம் முழுக்க மலேசியாவில்தான் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் இந்தியாவிலும் மலேசியாவிலும் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்த கதையை  தயார் செய்து விட்டு நாயகனை தேடிய இயக்குனர்,  அபிநய் புகைப்படத்தை பார்த்து அவரை அழைத்து நாயகனாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதற்கு பிறகு தான்  அவர் ஜெமினி கணேசன் வாரிசு என்று தெரிந்து இருக்கிறது.

அபிநய்க்கு ஜோடியாக பிரதிக்ஷா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். சித்தார்த்-யுவராஜ் இசையமைத்திருக்கிறார்கள். உரூஜ் புரடக்ஷன்ஸ் சார்பாக அப்துல் அஜீஸ் தயாரித்திருக்கிறார்.