Published:Updated:

மசாலா.. உல்டா.. : 'தமிழ் படம்' சிவா

Vikatan Correspondent

'சென்னை 29'-ல் அறிமுகமானார் மிர்ச்சி சிவா.  'தமிழ் படம்' வெளிவந்து வரவேற்பை பெற்றதை அடுத்து மிர்ச்சி சிவாவின் கால்ஷீட் டைரி நிரம்பி விட்டது.

புதிதாக 5 படங்களில் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் விமல், அஞ்சலி, பிந்து மாதவியுடன் இணைந்து நடிக்கும் 'மசாலா' , பல்வேறு தேசிய விருதுகளை வென்ற 'பாரதி' படத்தின் இயக்குனர் ஞான ராஜசேகரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். வித்தியசமான கதை களம் கொண்ட படமாம் இது.

'தமிழ் படம்' இயக்குனர் அமுதன் இயக்கும் அடுத்த படத்திலும் சிவா தான் நாயகன். அடுத்தாக, சிவாவை அறிமுகப்படுத்திய வெங்கட்பிரபு இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

புதுமுக இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் 'உல்டா' என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி படமாம் இது.

தான் ஒரு படம் இயக்கப் போவதாக அறிவித்து இருந்த சிவா, தற்போது அந்த ஆசையை சிறிது காலம் தள்ளி வைத்து இருக்கிறாராம். பிறகு இப்படி எக்குத்தப்பாய் கால்ஷீட் டைரி நிரம்பினால் தள்ளி வைக்க மாட்டாரா என்ன?