Published:Updated:

" எனக்கே ஷட்டரா ? " - டிசம்பரில் வேட்டை !

Vikatan Correspondent

'பையா' படத்தின் வரவேற்பை தொடர்ந்து, இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'வேட்டை'. மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். லிங்குசாமியின் நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ்  தயாரித்து இருக்கிறது. யு.டிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது.

இப்படத்தின் FIRST LOOK வெளியானதில் இருந்தே  இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதில் மாதவன் வசனமான "எனக்கே ஷட்டரா" என்ற வசனம் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இப்படத்தினை கிறஸ்துமஸ் தின விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு டிசம்பர் 23ம் தேதி வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

லிங்குசாமியின் இயக்கம், மாதவன், ஆர்யா இணைந்து நடிப்பு, யு.டிவியின் மார்கெட்டிங் என பெரும் படை இருப்பதால் இப்போதே விநியோகஸ்தர்கள் இப்படத்தினை பெரிய விலைக்கு  பேசி வருகிறார்கள்.