Published:Updated:

கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா!

Vikatan Correspondent
கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா!
கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா!

 ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படம் ‘கஸ்மோரா’. இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடிக்கிறார்.

இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்து வரும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா ஏற்கெனவே ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில், மற்றொரு கார்த்திக்கு ஜோடி தேர்வுகள் நடந்து வந்தது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘வெள்ளக்காரதுரை’ ஆகிய படங்களில் நடித்துள்ள ஸ்ரீதிவ்யா ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பை வரும் பிப்ரவரியில் தொடங்கவிருக்கின்றனர். படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்.

சூர்யாவின் ’மாஸ்’ படம் போன்று இதுவும் காமெடி கலந்த த்ரில்லர் என சொல்லப்படுகிறது. ’கஷ்மோரா’ என்றால் என்ன என்று கேட்டால் அது ஒருவரின் பெயர் . இந்த பெயரின் காரணம் படத்தில் தெரியவரும் என ரகசியம் காத்து வருகிறார் இயக்குநர் கோகுல்.