Published:Updated:

விக்ரம் + கே.வி.ஆனந்த் !

Vikatan Correspondent
விக்ரம் + கே.வி.ஆனந்த் !
விக்ரம் + கே.வி.ஆனந்த் !

கே.வி.ஆனந்த் - விக்ரம் இணைய இருக்கிறார்கள் என்பது தான் தமிழ் திரையுலகின் லேட்டஸ்ட் விஷயம்.

சூர்யா நடிக்க 'மாற்றான்' படத்தினை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

விக்ரம் தற்போது 'ராஜபாட்டை', 'கரிகாலன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அப்படங்களை அடுத்து இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார்.

'மாற்றான்' படம் எடுப்பதற்கு நீண்ட நாட்கள் ஆகும். சூர்யா இப்படத்திற்காக 8 மாதங்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார். ஆகையால் 'மாற்றான்' படத்திற்கு கே.வி.ஆனந்த் ஜூன் 2012 வரையாவது வேலை செய்யவேண்டி இருக்கும்.  

விக்ரம் தான் ஒப்புக் கொண்டுள்ள மூன்று படங்களையும் அதற்குள் முடித்து கொடுக்க இருக்கிறார்.

அதன் பிறகு இருவரும் இணைந்து படம் செய்ய இருக்கிறார்கள். தயாரிப்பாளர் யார், நாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.