Published:Updated:

அங்கேயும் ஒரு அமைதிப்படை...

அங்கேயும் ஒரு அமைதிப்படை...
அங்கேயும் ஒரு அமைதிப்படை...

அங்கேயும் ஒரு அமைதிப்படை...

ங்கள் பால்யத்தில் சனிக்கிழமைகளில் தூர்தர்ஷன் இந்திப்படம் பார்த்திருக்கிறீர்களா? ஆமாம் என்றால், ரஜினிகாந்த் நடித்த 'ஆஜ் கா அர்ஜூன்’, 'பூல் பனே அங்காரே, 'தியாகி’ போன்ற படங்களைப் பார்த்திருக்கக் கூடும். இவை தவிரவும் நிறைய போலீஸ்  கள்ளக் கடத்தல் மன்னர்களின் பழிவாங்கல் கதைகளைப் பார்த்திருப்பீர்கள். 20 படங்களை இதே ஸ்டைலில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, சல்மான் கான், சன்னி தியோல் போன்ற ஹீரோக்களை வைத்து எடுத்து பாலிவுட்டில் பாப்புலரானவர்தான் டைரக்டர் கே.சி.பொகாடியா. நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் பழைய பாணி கதையைக் கையில் எடுத்திருக்கிறார். படத்தின் பெயர் 'டர்ட்டி பாலிடிக்ஸ்’. 

மல்லிகா ஷெராவத்தும் ஓம் பூரியும் கொஞ்சிக் குலாவும் ஸ்கேண்டல் வீடியோ டைப் டிரெய்லர் இப்போது யூடியூபில் ஹிட்ஸ். பிப்ரவரி 13ல் ரிலீஸாகும் இந்தப் படம், பல அரசியல் அந்தரங்கங்களை தோலுரித்துக் காட்டும் என்கிறது பாலிவுட் சினிமா வட்டாரம்.

அங்கேயும் ஒரு அமைதிப்படை...

''படத்தில் இடம் பெறும் படுக்கையறைக் காட்சி கதைக்குத் தேவை யானதால் நெருக்கமாக நடித்தேன். உண்மையில் ஓம் பூரி போன்ற சீனியர் நடிகருடன் அப்படி நடித்த தைப் பெருமையாக நினைக் கிறேன்'' என்று தன்னிலை (மறந்த) விளக்கம் கொடுத் திருக்கிறார் மல்லிகா ஷெராவத்.

''இந்தப் படத்துக்காக இரண்டு வருடங்கள் ஸ்கிரிப்ட் வொர்க் செய்தேன். என்னுடைய முதல் படம்

அங்கேயும் ஒரு அமைதிப்படை...

 மிதுன் நடிப்பில் 'பியார் ஜுக்தா நஹின்’ (தமிழில் ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் 'நான் அடிமை இல்லை’ என்று ரீமேக் ஆனது) ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. 'டர்ட்டி பாலிடிக்ஸ்’ படம் அரசியல் படம் என்றாலும் மியூசிகல் ஹிட்டாகும். மூன்று இசையமைப்பாளர்கள். என் நண்பரும் டைரக்டருமான பிரகாஷ் ஜா இந்தப் படத்தை விறுவிறுப்பாக எடிட்டிங் செய்து கொடுத்திருக்கிறார். 2015ன் டிரெண்டிங் சினிமாவாக என் சினிமா இருக்கும்'' என முன்னோட்டம் மொழிகிறார் படத்தின் டைரக்டர் கே.சி.பொகாடியா. அரசியல்வாதி மல்லிகா ஷெராவத்தின் வலைவீச்சில் கவிழும் திமிங்கல அரசியல்வாதிகளாக ஜாக்கி ஷெராஃப், அசுதோஷ் ராணா, அனுபம் கெர், நஸ்ருதீன் ஷா போன்ற பழம்பெரும் வில்லன்கள் நடித்துள்ளார்கள்.

படத்தின் கதை  குறித்து விசாரித்தால்... 2011ல் ராஜஸ்தானை உலுக்கிய பன்வாரி தேவி என்ற பெண்மணியின் கதை. அவரின் ரோலில்தான் மல்லிகா நடிக்கிறார். பல வி.ஐ.பிகளின் வீக்னெஸ் தெரிந்து அவர்களோடு நெருக்கமாக இருந்து அதை வீடியோவாக்கி அரசியல் ஆதாயம் தேடியதாகவும் அதனால் அவர் அடியாட்கள் வைத்து கொலை செய்யப்பட்டதாகவும் போலீஸ் வரலாறு சொல்கிறது.

எது எப்படியோ டர்ட்டி பிக்சர் போல டர்ட்டி பாலிடிக்ஸும்  ஹிட் ஆகுமா?

ஆர்.சரண்

அடுத்த கட்டுரைக்கு