Published:Updated:

ஆஃப் த ரெக்கார்டு!

Vikatan Correspondent
ஆஃப் த ரெக்கார்டு!
ஆஃப் த ரெக்கார்டு!

காமெடி ஸ்பெஷலிஸ்ட் இயக்குநர்’ இயக்கி சமீபத்தில் வெளியான படம் ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளானதால், அவர் இயக்கத்தில் நடிக்க வாக்குறுதி அளித்திருந்த காமெடி ஹீரோ நடிகர் அதிலிருந்து பின்வாங்கி விட்டாராம். இயக்குநரிடம் 'நாம் சேரும் நேரம் இன்னும் அமையவில்லை சார், நேரம் வரும்போது நிச்சயம் நாம் இணைந்து படம் பண்ணலாம்’ என கூறிவிட்டாராம்! 

'நான் திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன்’ என்று நம்பர் நடிகை சொன்னாலும் தயாரிப்பாளர்களுக்கோ, இயக்குநர்களுக்கோ அவரை மீண்டும் ஹீரோயினாக நடிக்கவைக்க விருப்பமில்லையாம். வேண்டுமானால் ஹீரோவுக்கு அக்கா, அண்ணி வேடத்தில் நடிக்க வைக்கிறோம் என்று சில இயக்குநர்கள் நக்கலடிக்கிறார்களாம்!

மீபத்தில் மும்பையில் நடந்த விழாவில் ஒல்லி நடிகரும் மூத்த வாரிசு நடிகையும் அருகருகே இருந்தும்கூட பேசிக்கொள்ளவில்லையாம். பழைய நெருக்கமும் அதன் விளைவால் நடந்த பஞ்சாயத்தும்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்!

திறமையான நடிகை என பெயரெடுத்த கடைத்தெரு நடிகைக்கு தமிழைவிட தெலுங்கில் மவுசு அதிகம். சமீபத்தில் ஒரு தெலுங்குப் படத்தில் குத்தாட்டம் போட ஒரு கோடி கேட்க, எந்த நிபந்தனையும் இல்லாமல் ஒப்புக்கொண்டதாம் தயாரிப்பு தரப்பு!

ன்ச் நடிகர் அடுத்து நடிக்கும் படத்தில், தன் முந்தைய பட நாயகியான நம்பர் நடிகையையே நாயகியாக்க விரும்பினாராம் கிங் இயக்குநர். நடிகையை அணுகியபோது மறுத்துவிட்டார். கிங் இயக்கிய முதல் படத்தில் நடித்தபோதே விளம்பரத்துக்காக நடிகையைக் கேட்காமலே 'அவருக்கும், ஹீரோவுக்கும் கல்யாணம்’ என கொளுத்திப்போட்ட இயக்குநர் இந்தப் படத்தில் என்ன செய்வரோ என பயந்தே 'தேதிகள் இல்லை’ என்று சொல்லி மறுத்துவிட்டாராம் நம்பர்!