Published:Updated:

குடும்பத்துடன் ’என்னை அறிந்தால்’ படம் பார்த்த அஜித்- ட்விட்டரில் புது டிரெண்ட்!

விகடன் விமர்சனக்குழு
குடும்பத்துடன் ’என்னை அறிந்தால்’ படம் பார்த்த அஜித்- ட்விட்டரில் புது டிரெண்ட்!
குடும்பத்துடன் ’என்னை அறிந்தால்’ படம் பார்த்த அஜித்- ட்விட்டரில் புது டிரெண்ட்!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், நடிப்பில் பிப்ரவரி 5ம் தேதி வெளியாக உள்ள படம் ‘என்னை அறிந்தால்’. தெலுங்கிலும் இதே நாளில் ‘எந்த வாடுகானி’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 

குடும்பத்துடன் ’என்னை அறிந்தால்’ படம் பார்த்த அஜித்- ட்விட்டரில் புது டிரெண்ட்!

176 நிமிஷம் 48 நொடிகள் படத்தின் நீளமாம். அதாவது 2 மணி நேரம் 56 நிமிடங்கள் ஓடக்குடிய படமாம். எனவே இந்த படமும் நீளம் கருதி குறைக்கும் வாய்ப்பு இருக்கலாம் என பரவலாக பேசப்படுகிறது. 

இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அஜித்துக்காக, இயக்குனர் கௌதம் மேனன் ’என்னை அறிந்தால்’ படத்தின் பிரத்தேக காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அஜித், தனது மனைவி ஷாலினி, மகள் அனோஸ்காவுடன் இந்தக் காட்சியை கண்டு மகிழ்ந்தார். மேலும் படம் தனக்கு திருப்தியாக இருப்பதாகவும் இயக்குநர் கௌதம் மேனனிடம் தெரிவித்துள்ளார். ‘என்னை அறிந்தால்’ படம் தமிழகத்தில் மட்டும் 400 திரையரங்குகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் முதல் முறையாக அஜித் படங்களிலேயே அதிகமாக 95 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

படம் இன்னும் மூன்று நாட்களில் வெளியாக உள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில்  #YennaiArindhaalCountDownBegins  என புது டிரெண்டை உருவாக்கியுள்ளனர்.