Published:Updated:

ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி - அம்பாசிடராக காஜல்!

விகடன் விமர்சனக்குழு
ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி - அம்பாசிடராக காஜல்!
ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி - அம்பாசிடராக காஜல்!

தென்னிந்திய முன்னனி நடிகையான காஜல் அகர்வால் தமிழில் இரண்டு படங்கள் மற்றும் இந்தியில் இரண்டு படங்கள் என பிஸியாக மாறியுள்ளார். இந்நிலையில் ஏற்கனவே இவர் இந்தியன் என்.ஜி.ஓ அம்பாசிடராக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போது டெக்ஸ்டரிடி க்ளோபல் மூலம் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கல்வி, மற்றும் கல்வி சார்ந்த இதர விஷயங்களையும் சேர்க்கும் இந்த அமைப்பில் காஜல் அகர்வால் அம்பாசிடராக இணைந்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஒவ்வொரு குழந்தைகளின் கட்டாய கல்வி மற்றும் தரமான கல்வி பெறுதலில் எனது பங்கும் இருக்க போகிறது என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது என்னால் முடிந்த அளவு இதற்காக நான் பணியாற்றுவேன் என கூறியுள்ள காஜல் தனக்கு இது பெருமையான விஷயம் எனவும் தெரிவித்துள்ளார்.