Published:Updated:

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனிடம் நடிப்பு சான்றிதழ் கேட்ட தயாரிப்பாளர்!

Vikatan Correspondent
பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனிடம் நடிப்பு சான்றிதழ் கேட்ட தயாரிப்பாளர்!
பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனிடம் நடிப்பு சான்றிதழ் கேட்ட தயாரிப்பாளர்!

யுரேகா இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தொப்பி’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும் போது, இப்படத்தின் தலைப்பான ’தொப்பி’ என்றதும் எனக்கு பல தொப்பிகள் நியாபகம் வருகிறது. நான் பல பேருக்கு தொப்பி கொடுத்துள்ளேன் ஆனால் எனக்கே தொப்பி கொடுத்த ஆட்கள் இருக்கிறார்கள். 

நடிப்பதற்காக எனக்கு செக் கொடுத்தார் ஒரு தயாரிப்பாளர். ஆனால் அந்த செக் திரும்பி வந்துவிட்டது. நானே பல பேருக்கு செக் கொடுத்து மோசடி செய்துள்ளேன் . எனக்கே ‘செக்’ கொடுத்து ஏமாற்றுகிறார்கள். நான் நல்லவனாக வாழ ஆசைப்பட்டாலும் விடமாட்டார்கள் போல் இருக்கிறது. இனிமேல் படம் எடுக்க வருபவர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ‘டெபாசிட்’ கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள். நிறைய பேர் எனக்கு ‘செக்’ கொடுத்து ஏமாற்றியதால் தான் இதை சொல்கிறேன்’’ என்று ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் பேச, தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், சாதரண ஸ்ரீனிவாசனை பவர் ஸ்டார் ஆக்கியதே தயாரிப்பாளர்கள் தான். அவர் நடிகர் சங்கத்தில் தயாரிப்பாளர்களை டெபசிட் கட்டிவிட்டு படம் எடுக்க சொல்கிறார். இதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். எங்களிடம் பணம் இருக்கிறதா என் கேட்கும் உங்களுக்கு நடிக்க தெரியுமா. நடிகர் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பவர் ஸ்டார் இப்படி அவதூறாக பேசியது இதுவே கடைசி மேடையாக இருக்க வேண்டும் என டி.சிவா தனது கண்டனத்தை முன்வைத்தார்.