Published:Updated:

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஃபர்ஸ்ட் லுக் ரகசியம் சொல்கிறார் இயக்குநர் ஆதிக்!

Vikatan Correspondent
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஃபர்ஸ்ட் லுக் ரகசியம் சொல்கிறார் இயக்குநர் ஆதிக்!
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஃபர்ஸ்ட் லுக் ரகசியம் சொல்கிறார் இயக்குநர் ஆதிக்!

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் , ஆனந்தி நடிக்கும் படம் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’. படத்தின் ஃபர்ஸ்ட்ஃப் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ஜி.வி.பிரகாஷின் வித்யாச கெட்டப், என ஃபர்ஸ்ட் லுக் படு வித்யாசமாக அமைந்தது. 

இதுகுறித்து சமீபத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறும்போது, ஒரு பையன் லவ் ப்ரேக் ஆயிட்டா என்ன ஃபீலிங்ல இருப்பானோ அதுதான் அந்த ஃபர்ஸ்ட் லுக். கண்ணாடியும், கழுத்துல இருக்கற பௌவ்வும் ‘பாஷா’ படத்தின் இன்ஸ்பிரேஷன் எனவும், மேலும் நெஞ்சில் ஒரு புல்லட் இருக்கும் அது ஒரு பொண்ணு நம்மள விட்டுட்டு போயிட்டா நெஞ்சுல புல்லட் இறங்கின மாதிரி இருக்கும் அதத்தான் அப்படி காமிச்சோம். 

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஃபர்ஸ்ட் லுக் ரகசியம் சொல்கிறார் இயக்குநர் ஆதிக்!

அடுத்து அவர் கையில சரக்கு பாட்டில் வாட்ச் இருக்கும், கிட்டத்தட்ட ஒரு பொண்ணு விட்டுட்டு போயிட்டா 24 மணிநேரமும் குடிச்சுட்டு இருப்பான் அப்டிங்கறததான் அந்த வாட்ச் காட்டும். அதே வாயில பட்டாசு அவன் என்ன பண்றானு அவனுக்கே தெரியாது அததான் அது காட்டும். பையனோட உடம்பே பத்தி எரியற மாதிரி இருக்கும் அதுக்குதான் அந்த நெருப்பு.  அப்பறம் தன்ன சுத்தி என்ன நடந்தாலும் கண்டுக்க மாட்டான். அதான் பின்னாடி பில்டிங்லாம் இடிஞ்சு விழுற மாதிரி காமிச்சு அதவே கண்டுக்காத மாதிரி காமிச்சுருப்போம் இப்படி ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையே ஒரு தீமில் அமைத்திருப்பதாக இயக்குநர் சொல்லியிருக்காரு. 

இதே போல் ஜி.வி.பிரகாஷ் இதுகுறித்து பேசும்போது, ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ரிலீஸ் பண்ணி கொஞ்ச நேரத்துல ட்விட்டர்ல ட்ரெண்டாச்சு. எனக்கு ரொம்ப ஆச்சர்யமாவும் சந்தோஷமாவும் ஃபீல் பண்ணேனு இசையமைபாளரும் , இந்த படத்தோட ஹீரோவுமான ஜி.வி.பிரகாஷ் சொல்லியிருக்காரு. இவர் முதன் முதலில் நடிக்க ஆரம்பித்த படம் ‘பென்சில்’ ஆனால் அந்த படம் வருவதற்குள் இவர் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் விரைந்து முடிந்துவருவது குறிப்பிடத்தக்கது.