Published:Updated:

என்னை அறிந்தால் படத்தில் 6 நிமிட காட்சிகள் கட்!

Vikatan Correspondent
என்னை அறிந்தால் படத்தில் 6 நிமிட காட்சிகள் கட்!
என்னை அறிந்தால் படத்தில் 6 நிமிட காட்சிகள் கட்!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா , அருண் விஜய், விவேக் நடிப்பில் வெளியான படம் ‘என்னை அறிந்தால்’ . கடந்த வியாழன் அன்று பிப்ரவரி 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 

படத்தின் நீளம் 156.43 நிமிடங்கள் இருந்தது. முதல் மூன்று நாட்கள் ஹவுஸ்ஃபுல் ஷோவாக ஓடிய இந்த படம் இப்போதும் பல ஹைடெக் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் இல்லாத நிலையே நிலவி வரும் நிலையில் தற்போது படத்தின் நீளம் கருதி 6 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. 

முதல் பாதியில் சற்றே நீளம் என பொதுவான கருத்தும் வெளியான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஓட உள்ள படத்தில் 6 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டு காட்சிகள் திரையிடப்பட உள்ளன.