Published:Updated:

ராம் சரண் படத்தில் அனிருத் இசை !

விகடன் விமர்சனக்குழு
ராம் சரண் படத்தில் அனிருத் இசை !
ராம் சரண் படத்தில் அனிருத் இசை !

’ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலம் இந்திய பிரபலம் ஆன இசையமைப்பாளர் அனிருத், தொடர்ந்து ‘எதிர் நீச்சல்’, ‘மான் கராத்தே’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘கத்தி’ இப்போது ‘காக்கி சட்டை’ என உதயநிதியின் அடுத்த படத்தில் கூட அனிருத் தான் இசை. 

இளைஞர்கள் பலருக்கும் சென்ஷேனல் யூத்தாகவும் மாறியுள்ள அனிருத் இப்போது அடுத்த கட்டமாக தெலுங்கிலும் கால் பதிக்க உள்ளார். 

ராம் சரண் படத்தில் அனிருத் இசை !

’டூக்குடு’, ’ரெடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீனு வைத்லா இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உள்ள புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இதை தனது ட்விட்டர் பக்கதில் அறிவித்துள்ளார் அனிருத். 

’ராம் சரண் நடிப்பில், ஸ்ரீனு வைத்லா இயக்கும் தெலுங்கு படம் மூலம் முதல் முறையாக தெலுங்கில் இசைமையக்க உள்ளேன். இதை அறிவிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என ட்வீட் செய்துள்ளார்’ அனிருத்.