Published:Updated:

அஜித்தைத் தொடர்ந்து விஜய், சிவகார்த்திகேயன்!

விகடன் விமர்சனக்குழு
அஜித்தைத் தொடர்ந்து விஜய், சிவகார்த்திகேயன்!
அஜித்தைத் தொடர்ந்து விஜய், சிவகார்த்திகேயன்!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "புலி" படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது. விஜய் ஒட்டுமொத்த ”புலி” படக்குழுவினருக்கும் பிரியாணி செய்து தன்கையாலேயே பரிமாறவும் செய்திருக்கிறார்.

படப்பிடிப்பு முடியும் கடைசி நாள் அன்று,  தன் கையாலேயே பிரியாணி செய்து ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் விருந்து வைக்கும் பழக்கத்தினை உண்டாக்கியவர் நடிகர் அஜித். இந்த பாணியை ஒவ்வொரு நடிகரும் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவரைத் தொடர்ந்து “புலி” படக்குழுவிற்கே பிரியாணி விருந்து வைத்திருக்கிறார். மேலும் ஒவ்வொரு தொழில் நுட்பக் கலைஞருக்கும் தங்க நாணயம் பரிசளித்தது நாம் அறிந்ததே.

சமீபத்தில் சிவ கார்த்திகேயன் தன்னுடைய பிறந்த நாள் தினத்தன்று “ ரஜினிமுருகன்” படப்பிடிப்பில் பிறந்தநாளைக் கொண்டாடி படக்குழுவிற்கு விருந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.