Published:Updated:

வைரல் ஃபீவர்!

வைரல் ஃபீவர்!
வைரல் ஃபீவர்!
வைரல் ஃபீவர்!

ணிரத்னம் இஸ் பேக். தன்னுடைய 24-வது படமாக ‘ஓ காதல் கண்மணி’ படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் மணி. கடந்த வாரம் அந்தப் படத்தின் ட்ரெய்லர் வைரலில் இடம் பிடித்தது. துல்ஹர் சல்மான், நித்யா மேனன் நடிக்க பி.சி.ராமின் கேமரா அழகான விஷுவல்களைக் கொட்டிக் கொடுத்துக் கண்களைக் குளிர்ச்சியாக்கியது. இதில் மேட்டர் என்னன்னா... அப்படியே 2000-த்தில் இதே கூட்டணியின் ‘அலைபாயுதே’ படத்தை ட்ரெய்லரின் சில காட்சிகள் ஞாபகப்படுத்தின. புதுசா யோசிங்க சார் என்று ஒரு குரூப்பும், மணி ஹிட் ரூட்டுக்குத் திரும்பிவிட்டார் என ஒரு குரூப்பும் ட்வீட் தட்டியபடி ட்ரெய்லரை அதிகம் ஷேர் செய்தன. 10 மணிநேரத்தில் 3 லட்சம் ஹிட்ஸ். ‘அலைபாயுதே’ பார்ட் 2-வா மணி?

வைரல் ஃபீவர்!

னுஷ், சிவகார்த்திகேயன் லடாய் என யாரோ கொளுத்திப்போட, திக்கெட்டும் தீயாகப் பரவியது. எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றியது போல் ‘காக்கி சட்டை’ படத்தின் ப்ரொமோ ஷோவில் சிவகார்த்திகேயன் வந்தபோது தனுஷ் எழுந்து போய்விட்டதை முடிச்சு போட்டார்கள். ஆனால் ‘காக்கி சட்டை’ படம் ரிலீஸாகி இரு வேறு கமென்ட்களோடு ஹிட் லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கிறது. ‘தனுஷ், படத்தைப் பார்த்துட்டு என்னைப் பாராட்டினார். எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. வதந்திகளைக் கிளப்பி விடுபவர்களுக்காக நானும் அவரும் சேர்ந்து ஜெமினி பாலத்தில் நின்று டான்ஸ் ஆடித்தான் நிரூபிக்கணும் போல’ என்கிறார் சிவகார்த்திகேயன் வழக்கமான குறும்புடன். திருஷ்டி சுத்திப்போடுங்க சிவா!