Published:Updated:

கவர்ச்சியாக போஸ் கொடுத்த எமி!

Vikatan Correspondent
கவர்ச்சியாக போஸ் கொடுத்த எமி!
கவர்ச்சியாக போஸ் கொடுத்த எமி!

எமி ஜாக்சன் பிரபல பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்தப் படத்தினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ட்விட் செய்துள்ளார். இதை 160க்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்துள்ளனர், 400க்கும் மேற்பட்டோர் ஃபேவட்ரிட் கொடுத்துள்ளனர். 

நடிகைகளின் படுகவர்ச்சியான புகைப்படங்கள் மட்டுமே அட்டைப் படமாக மேக்சிம் பத்திரிகையில் இடம்பெறும். இந்தமுறை எமிஜாக்சன் படுக்கையறையில் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நிற்பது போன்ற புகைப்படம் அட்டைப்படமாக இடம்பெற்றிருந்தது.

எமி இந்த பத்திரிகைக்கு போஸ் கொடுப்பது இது இரண்டாவது முறை. இதுவரை மேக்சிம் பத்திரிகையில் வெளிவந்த மற்ற நடிகைகளை காட்டிலும் எமி ஜாக்சனின் கவர்ச்சி கொஞ்சம் குறைவு தான் என்று கிசுகிசுக்கிறது சினிமா வட்டாரம்.

எமிஜாக்சன் தற்பொழுது இந்தி மற்றும் தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் உதயநிதி படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அட்லீ இயக்கத்தில் விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் எமி.