Published:Updated:

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்!

Vikatan Correspondent
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்!
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்!

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால், சமுத்திரகனி நடிக்கும் படத்தில் விஷால் போலீசாக நடிக்க இருக்கிறார். அண்டர் கவர் போலீசாக விஷால் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனியின் பாத்திரம் குறித்து வதந்திகள் பரவ துவங்கியுள்ளன. 

சமுத்திரகனி இந்த படத்தில் மதுரையின் தாதாவாக நடிக்க இருப்பதாகவும், அவரை கண்டறியும் அண்டர் கவர் போலீசாக விஷால் நடிப்பதாக தகவல்கள் கசிந்தன. இதற்கு ட்விட்டரில் விஷால் பதிலளித்துள்ளார். 

சமுத்திரக்கனி எனக்கு அண்ணனாக நடிக்கிறார். வில்லன் பாத்திரம் பெங்களூருவைச் சேர்ந்த அறிமுக நடிகர் ஒருவர் செய்ய இருக்கிறார். என சமுத்திரக்கனி ரோல் குறித்து சுற்றிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எப்போதும் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு படப்பிடிப்புகளை விரைந்து முடிக்கும் விஷால் இம்முறை அதை தவிர்த்துவிட்டு சற்றே நிதானமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார். 

இதை தனது முந்தைய படமான ‘ஆம்பள’ படத்தின் வெற்றிக் கொண்டாட்ட சந்திப்பிலேயே விஷால் கூறியிருந்தார். ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு படப்பிடிப்புகளை நடத்துவது கடினம். மேலும் ஒவ்வொருவரும் இரவும் பகலும் இதற்காக உழைக்க வேண்டும் என்பதால் இனி அதை செய்யப்போவதில்லை என தெரிவித்தது கூறிப்பிடத்தக்கது.