Published:Updated:

ரஜினி , அஜித்துக்கு அப்பறம் நான் தான் மாஸ் - பவர் ஸ்டார் அதிரடி

Vikatan Correspondent
ரஜினி , அஜித்துக்கு அப்பறம் நான் தான் மாஸ் - பவர் ஸ்டார் அதிரடி
ரஜினி , அஜித்துக்கு அப்பறம் நான் தான் மாஸ் - பவர் ஸ்டார் அதிரடி

 'லத்திகா’ படம் மூலம் தமிழுக்குள் எண்ட்ரியானவர் ’பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன். தொடர்ந்து ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’, ’யா யா’ , ‘ஐ’ உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்துள்ளார். பவர் ஸ்டார் என்றவுடனேயே பல நிகழ்ச்சிகளில் கைதட்டுகள் பலமாக விழுவது நாம் அறிந்ததுதான். 

அதற்காக சற்றே மேலே போய் பவர் ஸ்டார் அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “யார் விருது வாங்குறாங்கன்னு முக்கியம் இல்ல. யார் பேர சொன்னா விசில் சத்தம் காதை பிளக்குதுன்னு பாருங்க… ரஜினி, அஜித்துக்கு அப்புறம் என்னோட பேருக்குதான் அந்த விசில் சத்தம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.

ரஜினி , அஜித்துக்கு அப்பறம் நான் தான் மாஸ் - பவர் ஸ்டார் அதிரடி

இதனால் சினிமா வட்டாரங்களிலும் , ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே இனி தயாரிப்பாளர்கள் வங்கிக் கணக்கை காட்டிவிட்டு படத்தைத் துவக்குங்கள் என கூறி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. இப்போது இது வேறயா.