Published:Updated:

செல்வராகவன், சிம்பு படத்தில் இரண்டு நாயகிகள்!

Vikatan Correspondent
செல்வராகவன், சிம்பு படத்தில் இரண்டு நாயகிகள்!
செல்வராகவன், சிம்பு படத்தில் இரண்டு நாயகிகள்!

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்தே பரபரப்புடன் விமர்சனங்களும் கருத்துகளும் பரவி வந்தன.  இப்போது புதிய செய்தியாக இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவிருக்கின்றனர்.

செல்வராகவன், சிம்பு படத்தில் இரண்டு நாயகிகள்!

த்ரிஷா, டாப்ஸி இருவருமே சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள். மேலும் ஜகபதி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான போட்டோ ஷூட் சென்னையில் விரைவில் நடக்கவிருக்கிறது. தொடர்ந்து படப்பிடிப்பு மே மாதம் முதல் வாரத்தில் சென்னையில் ஆரம்பமாகவிருக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு யுவன் இசையமைக்க அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். தற்பொழுது சிம்பு, கெளதம் மேனனின் ’அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.