Published:Updated:

’தல57’ - இயக்குநர் விஷ்ணுவர்தன்

’தல57’ - இயக்குநர் விஷ்ணுவர்தன்
’தல57’ - இயக்குநர் விஷ்ணுவர்தன்

’என்னை அறிந்தால்’ படத்தையடுத்து அஜித் நடித்து வரும் அவரது 56வது படத்தை ‘வீரம்’ பட இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். ஸ்ருதி ஹாசன் , லட்சுமி மேனன் நடிக்கும் இப்படத்திற்கு இசை அனிருத். இப்படத்தின் ஷுட்டிங் தற்போது நாவலூர் அருகில் நடந்து வருகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் படங்கள் நேற்று இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. 

இந்நிலையில் இந்த படத்தையடுத்து அஜித் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நிக் ஆர்ட்ஸ், சக்கரவர்த்தி தயாரிக்க இருக்கிறார். அஜித் படங்கள் என்றாலே ஒரு காலத்தில் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்புதான் அதிகம் இருக்கும். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது.

’தல57’ - இயக்குநர் விஷ்ணுவர்தன்

விஷ்ணுவர்தன் இயக்கம் என்பதால் இவர் படமென்றாலே இசை யுவன் ஷங்கர் ராஜாவாகத்தான் இருப்பார். அந்த வகையில் இந்த படத்திலும் யுவன் ஷங்கர் ராஜா இசை மற்றும் யுவன் ,அஜித் காம்போ சிறப்பு தீம் மியூசிக் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.