Published:Updated:

பாஸ்கர் த ராஸ்கல் பட ரீமேக் - ரஜினி ஆர்வம்?

பாஸ்கர் த ராஸ்கல் பட ரீமேக் - ரஜினி ஆர்வம்?
பாஸ்கர் த ராஸ்கல் பட ரீமேக் - ரஜினி ஆர்வம்?

 'லிங்கா’ படத்தையடுத்து ரஜினி  ’மெட்ராஸ்’ பட இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது. இசையும் சந்தோஷ் நாராயணன் என தகவல்கள் கசிந்தாலும் சம்மந்தப்பட்ட படக்குழு இதுகுறித்து மூச்சு விடாமல் உள்ளனர். 

இது தவிர்த்து ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செல்வில் ஒரு அறிவியல் சார்ந்த படத்தில் ரஜினி நடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா, பேபி அனைகா நடிப்பில் வெளியான படம் ‘பாஸ்கர் த ராஸ்கல்’. 

பாஸ்கர் த ராஸ்கல் பட ரீமேக் - ரஜினி ஆர்வம்?

இந்த படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினி அப்படத்தை ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என விருப்பப் படுவதாக கூறப்படுகிறது. எனினும் இந்த படத்தின் தமிழ் உரிமையை ஏற்கனவே எஸ்.எஸ்.துரைராஜ் வாங்கி வைத்துள்ளாராம். 

ரஜினியிடம் இதுகுறித்து அவரும் தெரிவிக்க ரஜினி பதில் ஏதும் சொல்லாமல் கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிப்பாரா இல்லையா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.