Published:Updated:

பெரும் தொகைக்கு விலைபோன ஜெயம்ரவி படம்.

Vikatan Correspondent
 பெரும் தொகைக்கு விலைபோன ஜெயம்ரவி படம்.
பெரும் தொகைக்கு விலைபோன ஜெயம்ரவி படம்.

ஜெயம்ரவி ஹன்சிகா நடித்திருக்கும் படம் ரோமியோஜூலியட். லட்சுமண் இயக்கியிருக்கும் இந்தப்படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. மெட்ராஸ்எண்டர்மெயின்மெண்ட் சார்பாக நந்தகோபால என்பவர் தயாரித்திருக்கும் இந்தப்படத்தின் தமிழகவெளியீட்டு உரிமையை காஸ்மாவில்லேஜ் சிவகுமார் என்பவர் வாங்கியிருக்கிறாராம்.

 பெரும் தொகைக்கு விலைபோன ஜெயம்ரவி படம்.

இவர் ஒன்பதுலகுரு படத்தைத் தயாரித்தவர், அதன்பின் சிபிராஜ் நடித்த நாய்கள்ஜாக்கிரதை படத்தை மொத்தமாக வாங்கி வெளியிட்டார். இப்போது இந்தப்படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை அவர் வாங்கியிருக்கிறார் என்று சொல்கிறார்கள். இதுவரை ஜெயம்ரவி படத்துக்கான வியாபார அளவைவிடச் சில மடங்கு அதிகமாக இந்தப்படத்தின் தமிழகஉரிமைக்கு விலை கொடுத்திருக்கிறார்களாம்.

இப்படத்தின் உரிமையை அந்நிறுவனம் வாங்கக்காரணமே படத்தில் இடம்பெற்றிருக்கும் டண்டணக்கா பாடல்தான் என்றும் சொல்கிறார்கள். அனிருத் பாடியுள்ள அந்தப்பாடல் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி இளைஞர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறதாம். அந்த ஒருபாடலே படத்தைக் காப்பாற்றிவிடும் என்று நம்பியே பெரும்தொகை கொடுத்துப் படத்தை வாங்கியிருக்கிறாராம்.

தொகை எவ்வளவு என்பதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை சொல்லவும் மாட்டார்கள், திரையுலகில் விசாரித்தால் இந்தப்படத்தை சுமார் பத்துகோடிக்கு வாங்கியிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.