Published:Updated:

இந்தியில் படம் தயாரிக்கிறார் சித்தார்த்?.

இந்தியில் படம் தயாரிக்கிறார் சித்தார்த்?.
இந்தியில் படம் தயாரிக்கிறார் சித்தார்த்?.

 ’எனக்குள் ஒருவன்’  படம் தமிழில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று நம்பியிருந்தார் அதன் நாயகன் சித்தார்த். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு அந்தப்படம் போகாதது அவருக்கு வருத்தமே. அந்தப்படத்துக்குப் பிறகு சித்தார்த், சுந்தர்சியின் ’அரண்மனை’ இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே சத்தமின்றி இந்திப்படமொன்றில் நடித்துக்கொண்டிருக்கிறாராம். தீரஜ் இயக்கும் அந்தப்படத்தைத் தயாரிப்பவர் சித்தார்த்தேதான் என்று சொல்கிறார்கள். காதலில்சொதப்புவதுஎப்படி? என்கிற குறும்படத்தை தமிழில் முழுநீளப்படமாக எடுத்தார் சித்தார்த் இந்தியிலும் அதையே செய்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்தியில் படம் தயாரிக்கிறார் சித்தார்த்?.

புகழ்பெற்ற ஜில்ஜங்ஜக் என்கிற குறும்படத்தைத்தான் அவர் முழுநீளப்படமாகத் தயாரித்துக்கொண்டிருக்கிறாராம். இதுதொடர்பாக எனக்குள் ஒருவன் வெளியீட்டுக்கு முன்பே செய்திகள் வந்தபோது சித்தார்த் அதை மறுத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. இப்போது வெளிப்படையாக அறிவிக்காமலேயே பெரும்பகுதிப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார்களாம். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததும் உடனடியாக வெளியிடவும் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தியில் அந்தப்படத்துக்கு வரவேற்பு கிடைத்தால் அப்படியே தமிழில் மொழிமாற்றம் செய்து கொண்டுவரவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.