Published:Updated:

ஊரெல்லாம் சினிமா ஸ்டாரு!

ஊரெல்லாம் சினிமா ஸ்டாரு!

ஊரெல்லாம் சினிமா ஸ்டாரு!

ஊரெல்லாம் சினிமா ஸ்டாரு!

Published:Updated:
##~##
''எ
ன் பேரு கார்த்திக்... இது என் பொஞ்சாதி குஷ்பு. என் முதல் பொண்ணு ஐஸ்வர்யா ராயி... ரெண்டாவது பொண்ணு சிம்ரனு. 'வருஷம் 16’ படம் வந்த நேரம் நாங்க கல்யாணம் கட்டிக்கிட்டோம்'' என்கிற கார்த்திக், ''உள்ளே போ புள்ள, வேத்தாளுங்க முன்னாடி நிக்கக் கூடாது!'' என்று மகள்களை அதட்டிவிட்டு, ''நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க... ஊருக்குள்ள அபராதம் போட்டுடுவாங்க'' என்கிறார்பவ்யமாக!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோபிசெட்டிப்பாளையம் அருகில் கரட்டுப்பாளையம் கிராமம் எம்.ஜி.ஆர். நகரில் அத்தனை பேருக்கும்,  சினிமா நடிகர், நடிகைகளின் பெயர்கள்தான். தொன்று தொட்டு வரும் பழக்கம் என்பதால், ஊருக்குள்    டி.ஆர்.ராஜகுமாரி முதல் அமலா பால் வரை இருக்கி றார்கள். சில நாட்களுக்கு முன் பிறந்த ஒரு குழந்தைக்கு அவர்கள் வைத்த பெயர், ஹன்சிகா மோத்வானி!

ஊரெல்லாம் சினிமா ஸ்டாரு!

நம்மிடம் பேசிய சிவாஜி, அநியாயத்துக்கு நடிகர் திலகம் சிவாஜியை இமிடேட் செய்து பேசுகிறார். ''ஏம்ப்பா... பேருல மட்டும் இல்லை... ஒழுக்கத்துலயும் எங்களை மிஞ்ச முடியாது. இந்த மண்ணை நாங்க தெய்வமா மதிக்கிறோம். அதனால, ஊருக்குள்ள யாரும் செருப்பு போடக் கூடாது. சைக்கிள், பைக், கார் எதுவும் இந்த மண்ணை மிதிக்கக் கூடாது. பீடி, சிகரெட் புடிக்கக் கூடாது. சாராயம் குடிக்கக் கூடாது. ஆம்பிளைங்க முன்னாடி பொம்பளைங்க தரையில தான் உட்காரணும்.

ஊரெல்லாம் சினிமா ஸ்டாரு!

அம்மா, பொஞ்சாதி, குழந்தைகளைத் தவிர வேற எந்தப் பொண்ணையும் தொட்டுப் பேசக் கூடாது. தெரியாமத் தொட்டாலும் சாமி கண்டுபிடிச்சுடும். கல்யாணத்துக்கு வரதட்ணையா ஒரு குண்டுமணித் தங்கம் கூட வாங்க மாட்டோம். கூட்டுக் குடும்பமாத்தான் இருப்போம். ஒரு குடும்பத்துல குறைஞ்சது 30 பேர்ல இருந்து 60 பேர் வரை இருப்பாங்க. தொழி லுக்குப் போகும் போது, சாமிக்குப் பூஜை போட்டு எந்தத் திசைப் பக்கமா போறதுன்னு கேட்டுட்டுத்தான் போவோம். போற இடத்துல இடைஞ்சல் வந்தா, கண்ணை மூடிக்கிட்டு சாமிகிட்ட கேட்போம். 'திரும்பி வந்துடு’ன்னு உத்தரவு வந்தா, மறு நிமிஷமே மொத்தமாக் கிளம்பிடு வோம்!'' என்கிறார் சிவாஜி.

ஊருக்குள் சுமார் 400 குடும்பங்கள் இருக்கின்றன. தேர்தல் பிரசாரத் துக்கு வரும் வேட்பாளர் கூட செருப்பைக் கழற்றிவிட்டுதான் ஊருக்குள் நடந்து வர வேண்டும். இவர்களின் தொழில் ஊர், ஊராகச் சென்று கழைக் கூத்தாடுவது.

ஒரு பாட்டியம்மாவின் பெயர், 'நான் ஏன் பிறந்தேன்?’ அந்தப் படம் வந்த நேரத் தில் அவரது குடும்பத்தில் கொடும் வறுமையாம். அப்போது ஏழாவது பிள்ளையாகப் பிறந்ததால், பாட்டிக்கு இந்தப் பெயர்!

''முன்ன தொழில் நல்லா இருக்கும். மாசத்துல பத்து கூத்தாவது கட்டுவோம். இப்ப எங்கே, கவர்மென்ட்டு இலவச டி.வி. கொடுத்ததால எங்க தொழிலே முடங்கிப்போச்சு. நாடகம், கூத்துக் கட்டுறது போய் சர்க்கஸ் காட்டிப் பொழப்பு ஓடுது.

ஊரெல்லாம் சினிமா ஸ்டாரு!

சினிமாவின் தாய் வீடே எங்க தொழில்தான். சினிமாக்காரங்க கோடிகளில் கொழிச்சிட்டு இருக்குறப்போ, நாங்க மட்டும் தெருக்கோடியில் பசியும் பட்டினியுமாக் கிடக்கோம்'' விரக்தி தெறிக்கிறது 'சீயான்’ விக்ரம் வார்த்தைகளில்!

- வீ.கே.ரமேஷ் படங்கள்: க.தனசேகரன்

ஊரெல்லாம் சினிமா ஸ்டாரு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism