Published:Updated:

’நான் டெரர் இல்ல ஃப்ளவர்’ கலை இயக்குநர் மற்றும் நடிகர் கிரணுடன் ஒரு சந்திப்பு!

’நான் டெரர் இல்ல ஃப்ளவர்’ கலை இயக்குநர் மற்றும் நடிகர் கிரணுடன் ஒரு சந்திப்பு!
’நான் டெரர் இல்ல ஃப்ளவர்’ கலை இயக்குநர் மற்றும் நடிகர் கிரணுடன் ஒரு சந்திப்பு!

’நான் டெரர் இல்ல ஃப்ளவர்’ கலை இயக்குநர் மற்றும் நடிகர் கிரணுடன் ஒரு சந்திப்பு!

சுருட்டை முடி, முரட்டு தாடி, கோபமான கண்கள் என்று பார்க்கும்போதே டெர்ரர் லுக்குடன் இருக்கிறார் கலைஇயக்குநர் கிரண்.விஐபி, அனேகன் போன்ற படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மனதில் நின்றுகொண்டு இருக்கும்  கிரணிடம்  ’நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின் இடையே ஒரு குட்டி பேட்டி... 

பார்க்கவே இவ்வளவு டெர்ரரா இருக்கீங்களே? படத்துல மட்டுமா இல்ல ரியல் லைஃப்லயும் இப்படியா?

ஐயோ பாஸ்! “பாக்க தான் நான் டெர்ரர், ஆனா என் மனசோ ஒரு ஃப்ளவர்” என டி.ஆர் ரேஞ்சுக்கு ஒரு பஞ்ச் டயலாக்குடன் ஆரம்பித்தார்’, நான் ரொம்ப சாப்ட், என் அசிஸ்டென்ட்ஸ் கிட்ட கூட கோபப் படமாட்டேன்! கோபப்பட்டா ஒண்ணுமே லைஃப்ல சாதிக்க முடியாது. அதனால எப்பவுமே லைஃப்ல ஹேப்பியா சிரிச்சுக்கிட்டே இருக்கணும்னு தான் என் ஆசை.. அப்படிதான் எப்பவும் இருக்கேன்.

சினிமா இண்டஸ்ட்ரி குள்ள எப்படி வந்தீங்க? சினிமா ஆசை எப்படி வந்தது?

சின்ன வயசுலேஇருந்தே எனக்கு டைரக்டர் ஆகணும்னு தான் ஆசை. அதுக்கு அப்பறம் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ்ல சேர்ந்து படித்தேன். பிறகு அப்படியே நிறைய விளம்பரப் படங்கள் பண்ண ஆரம்பிச்சேன். அதுக்கு அப்பறம் டைரக்டர் மற்றும் கேமராமேன் திரு ராஜீவ் மேனன் அவர்கள் தான் என்னை ஆர்ட் டைரக்டரா ப்ரோமோட் பண்ணினாரு. அப்புறம் கிட்டத்தட்ட ஏழு வருஷம்முழுக்க விளம்பர பிலிம் தான் பண்ணிட்டு இருந்தேன். இந்தியாவுல இருக்கற எல்லா மொழிகளிலும் , எல்லா பிராண்டுக்கும் பண்ணி இருக்கேன். கிட்டத்தட்ட 1700 விளம்பரம் பிலிம் பண்ணி இருக்கேன். இதற்கிடையே ’குப்பி’னு ஒரு படம், அது தான் முதன்முதலில் நான் ஆர்ட் டைரக்டரா வொர்க் பண்ணின படம். அதுக்கு அப்புறம் ’ஜகடம்’னு ஒரு தெலுங்கு படம், அப்பறம் ’திரு திரு துரு துரு’னு ஒரு படம் பண்ணினேன். இப்படித்தான் இண்டஸ்ட்ரி குள்ள வந்தேன்.

’நான் டெரர் இல்ல ஃப்ளவர்’ கலை இயக்குநர் மற்றும் நடிகர் கிரணுடன் ஒரு சந்திப்பு!

படம் நடிக்க வாய்ப்பு வந்தது எப்படி?

நான் நிறைய விளம்பரங்கள் பண்ணியிருக்கறதுனால நிறைய ஒளிப்பதிவாளர்களை  நல்லாத்தெரியும். அதுல கே.வி. ஆனந்த் எனக்கு க்ளோஸ் ஃப்ரண்ட். ஒரு முறை ’அயன்’ படத்துக்காக ஜகன் கேரக்டரை என்னதான் நடிக்க சொன்னாரு, நான் உடனே சிரிச்சேன். என்ன நடிக்க சொன்னா சிரிக்கிறனு கேட்டார்! உடனே எனக்கு நடிக்கத் தெரியாதுன்னு சொல்லிட்டேன், அப்பறம் படம் பார்த்ததும் ரொம்ப ஃபீல் ஆயிடுச்சு! ஐயோ நாம நடிச்சிருக்கலாமோனு ஒரு நிமிஷம் நினைக்கவச்சுட்டாரு!! அதுக்கு பிறகு எல்லோரும் ரொம்ப கட்டாயம் பண்ணி நடிக்கச் சொன்னதுனால திருதிரு துறுதுறு படத்துல ஆர்ட் டைரக்டரா வொர்க் பண்ணிகிட்டே ஒரு காமெடியான இன்ஸ்பெக்டர் ரோல் செஞ்சேன், அந்தப் படம் ரீலீஸ் ஆனதுக்கு அப்பறம் கேவி ஆனந்த் சார் எனக்கு போன் பண்ணி ரொம்பத் திட்டினார் “ நான் கூப்பிட்டா மட்டும் நடிக்க வர மாட்ற!” அதெல்லாம் தெரியாது நீ நடிச்சே ஆகணும்னு சொல்லி கோ படத்துல ஒரு கேரக்டர் பண்ண வச்சாரு, அதுக்கு அப்பறம் மயக்கம் என்ன, ’இரண்டாம் உலகம்’னு இரண்டு படங்களிலும் ஆர்ட் டைரக்டராகவும் வொர்க் பண்ணினேன், அப்பறம் நடிச்சு இருந்தேன், ஆனா படத்தோட நீளத்துக்காக அதை எடுத்துட்டாங்க....அப்பறம் ’வாமனன்’, ’போடா போடி’, ’முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ’3’ போன்ற படங்களும் வாய்ப்பு வந்து பண்ணினேன்.

சமீபத்துல வந்த அனேகன் விஐபி ரெண்டு படங்களுக்கும் வரவேற்பு எப்படி இருந்துச்சு?

அனேகன் படத்துல ஆர்ட் டைரக்டரா தான் வொர்க் பண்ணினேன். பொதுவா ஆர்ட் டைரக்டர் லாம் ஷூட்டிங் நடக்கும்பொது ஸ்பாட்ல இருக்கமாட்டாங்க, அதுலயும் நான் இருக்கவே மாட்டேன், என் வேலை முடிஞ்சதுனா அடுத்தநாள் ஷூட்டிங்குக்கு தேவையானத ரெடி பண்ண போய்டுவேன், ஆனா கேவி ஆனந்த் சார்க்கு ஃப்ரேம் ரொம்ப முக்கியம்ங்கறதுனால எனக்கு ஒரு கேரக்டர் ஃபிக்ஸ் பண்ணி என்னையும் கூடவே படத்துல வரவச்சுட்டாரு. அந்த படத்துல கார்த்திக் சார்க்கு ஒரு அடியாள் மாறி திரு திருனு முழிச்சுகிட்டு சும்மா போய்ட்டு வந்துட்டு இருந்தேன், உடனே என்னை ரவுடி ரவுடினு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க... அதேமாதிரி ’அனேகன்’ பண்ணும்போது விஐபி படத்துல ஒரு சீன் இருக்கு அண்ணா, சும்மா ஒரு ரெண்டு நாள் தான், கொஞ்சம் வந்து நடிச்சுட்டு போங்க, செம ரீச் இருக்கும்னு தனுஷ் சொன்னார், ரெண்டு நாள்ல என்ன ரீச் வரப்போகுதுன்னு நானும் சும்மாபோய் நடிச்சுட்டு வந்துட்டேன், கடைசியில டிரெய்லர்லயே என்ன போட்டுட்டாங்க! படம் ரிலீஸ்க்கு அப்புறம் நிறைய பேரு போன் பண்ணி நல்லா இருக்குனு சொன்னாங்க நிறைய பேரு ‘உன்ன இங்கேயே குத்தி போட்டுடுவேன்!”னு நான் சொன்ன டயலாக்கை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க”!! ஸோ ரெண்டுக்குமே செம ரெஸ்பான்ஸ்.

இப்போ கரண்ட் ப்ரோஜெக்ட்ஸ் என்னஎன்ன?

'பாயும் புலி' படத்துல வில்லன் கேரக்டர் பண்றேன், அடுத்து நலன் குமாரசாமி சார் டைரக்ட் பண்ற படத்துல(படம் பெயர் வைக்கவில்லை) விஜய் சேதுபதியோட நண்பனா ஒரு காமெடியான ரோல் பண்றேன், அப்பறம்  'திருநாள்' படத்துல ஜீவாவோட நண்பனா படம் ஃபுல்லா வருவேன், அதைத் தவிர 'நானும் ரவுடிதான்' படத்துல ஆர்ட் டைரக்டரா வொர்க் பண்றேன்.

நடித்ததில் பிடித்தது?

நான் சூர்யாவோட ஒரு விளம்பரம் பண்ணினேன், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடிக்காக அந்த விளம்பரத்துல நான் ஒரு மைனர், என்ன ஊரே செமயா ப்ரிபேர் பண்ணி அனுப்பும், செம பந்தாவா போய் கடைசியில முதல் கேள்வியிலேயே நான் அவுட் ஆய்டுவேன்” அந்த விளம்பரம் எனக்கு ரொம்ப பிடிச்ச விளம்பரம். அதுக்கு அப்புறம் ’விஐபி’ல நான் பண்ணின கவுன்சிலர் ரோல்.

’நான் டெரர் இல்ல ஃப்ளவர்’ கலை இயக்குநர் மற்றும் நடிகர் கிரணுடன் ஒரு சந்திப்பு!

உங்கள் ஆசை?

டைரக்டர் ஆகணும்னு தான் ஒரு பெரிய ஆசை.  அதை பொறுமையாக ஆகலாம், அப்படி ஆகும் பொழுது ஃபேண்டஸி படம் எடுக்கணும்னு தான் ஆசை. ஆங்கிலத்துல ஹேரி பாட்டர் இருக்கற மாதிரி தமிழ்ல இருக்கற இராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அந்த லெவலுக்கு எடுத்துட்டு போகணும்னு ஒரு பெரிய ஆசை...

பிடித்த ஹீரோ ஹீரோயின் யார் யார்?

ஹீரோனா அது எப்பவுமே சூப்பர்ஸ்டார் தான், ஹீரோயின்.... ம்ம் ஜோதிகா, சிம்ரன், காஜல் அகர்வால்.

உங்க ஃபேமிலி பத்தி சொல்லுங்க!

எனக்கு ஒரே ஒரு மனைவி (சிரித்துக்கொண்டே).எங்களது லவ் மேரேஜ் தான். எங்க காலேஜ்ல என்னோட ஜூனியர் தான் அவங்க, இப்போ ஃபேஷன் டிசைனிங் முடிச்சிட்டு ஒரு பொடிக் வச்சிருக்காங்க. அதே மாதிரி எனக்கு இரண்டு மகன்கள்.

சினிமா துறைக்கு வரலைன்னா என்ன செஞ்சிருப்பீங்க?

சினிமாக்கு வரலைன்னா கண்டிப்பா ஒரு அனிமேட்டரா தான் ஆகியிருப்பேன். ஏன்னா என் கூட படிச்சவங்க எல்லாரும் பெங்களூர், அமெரிக்கா, இங்கிலாந்து’ன்னு அனிமேட்டரா தான் இருக்காங்க, அதே மாதிரிதான் நானும் ஆகியிருப்பேன். லைஃப்ல ஒவ்வொருத்தருக்கும் ஒரு டர்னிங் பாயிண்ட் இருக்கும், அதே மாதிரி நான் இந்த அளவுக்கு வருவதற்கு காரணம் என் காலேஜ் தான். என்று நெகிழ்ச்சியுடன் விடைபெற்றார் கிரண்

சு. கற்பகம்

படங்கள்: அ. குருஸ் தனம்

அடுத்த கட்டுரைக்கு