Published:Updated:

சிம்புவின் செய்தியாளர்கள் சந்திப்பு இரத்தானது எதனால்?

சிம்புவின் செய்தியாளர்கள் சந்திப்பு இரத்தானது எதனால்?
சிம்புவின் செய்தியாளர்கள் சந்திப்பு இரத்தானது எதனால்?

சிம்புவின் செய்தியாளர்கள் சந்திப்பு இரத்தானது எதனால்?

சிம்பு படம் வெளிவந்து நீண்டநாட்களாகிவிட்டன, அவர் நடித்து வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கும் வாலு படமும் பல்வேறு வெளியீட்டுத் தேதிகளைப் பார்த்துவிட்டது. அதனால் அந்தப்படத்தின் வெளியீட்டுப் பொறுப்பைத் தாமே ஏற்றுக்கொண்டு அதை வெளியிடும் முயற்சியில் மிகத்தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறாராம் டி.ராஜேந்தர்.

சிம்புவின் செய்தியாளர்கள் சந்திப்பு இரத்தானது எதனால்?

இந்தப்படத்தின் பொறுப்பை மட்டுமின்றி நிக்ஆர்ட்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகவிருக்கும் இன்னொரு படமான வேட்டைமன்னன் படத்தின் பொறுப்பையும் சிம்புவே ஏற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தத்தகவல்களைச் சொல்வதற்காகத்தான் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தாராம். ஆனால் கடைசிநேரத்தில் அந்தச்சந்திப்பை இரத்துச் செய்துவிட்டார்கள்.

வாலு ரிலிஸ்தான் தாமதம் ஆகிறது என்றால் அதைச் சொல்வதற்கும் தாமதமாகிறது. ஏன் இப்படி? அந்தச்சந்திப்பின் போது வாலு படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க நினைத்திருக்கிறார்கள். ஆனால் ஜூன் மாதம் முதல் பெரியபட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதி சம்பந்தமாக தயாரிப்பாளர்கள்சங்கம் சில நிபந்தனைகளை உருவாக்கியிருக்கிறது, அந்த நிபந்தனைகளுக்குட்பட்டுத்தான் இனிமேல் பெரியபடங்களை வெளியிடவேண்டுமாம்.

சிம்பு ஒரு ரிலீஸ் தேதியைச் சொல்லப்போக அதனால் புதிதாக ஏதாவது சிக்கல் உருவாகிவிடக்கூடாது என்பதனாலேயே அந்த விசயத்தைத் தெளிவுபடுத்திக்கொண்டு பத்திரிகையாளர்களைச் சந்திக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம். இதன் காரணமாகவே அந்தச்சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டதென சொல்லப்படுகிறது.

செய்தியை ஆடியோ வடிவில் கேட்க:

அடுத்த கட்டுரைக்கு