Published:Updated:

தயாரிப்பாளர் தாணு மீது மானநஷ்ட வழக்கு...லிங்கா விநியோகஸ்தர் அறிவிப்பு!

தயாரிப்பாளர் தாணு மீது மானநஷ்ட வழக்கு...லிங்கா விநியோகஸ்தர் அறிவிப்பு!
தயாரிப்பாளர் தாணு மீது மானநஷ்ட வழக்கு...லிங்கா விநியோகஸ்தர் அறிவிப்பு!

தயாரிப்பாளர் தாணு மீது மானநஷ்ட வழக்கு...லிங்கா விநியோகஸ்தர் அறிவிப்பு!

ரஜினி நடித்த லிங்கா படத்தின் பிரச்னை நாளொருவீதம் பெரிதாகி வருகிறது. படம் நஷ்டம் ஏற்பட்டதால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆரம்பத்தில் பிரச்னை செய்தனர் , பின்னர் பணம் கொடுக்க ரஜினி தரப்பு முன்வரவே ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு பிரச்னை சுமூகமானது.

தற்போது பணம் முழுமையாகத் தரவில்லை என்று மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்புகள் இரண்டு நாட்களாக நடந்து வருகின்றன.  இன்று நடந்த சந்திப்பில் விநியோகஸ்தர் சிங்கார வேலன் தாணு மீது மான நஷ்ட வழக்கு போடவிருப்பதாக அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பு தரப்பட்ட அறிக்கையில், 2009ம் ஆண்டு அவர் தயாரித்த ‘கந்தசாமி’ பட வெளியீட்டின் போது பேசிய தாணு, தான் ஒரு கிராமத்தை தத்தெடுத்து இருப்பதாகவும், அந்த கிராமத்திற்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து வருவதாகவும் அந்த கிராமத்தில் தன்னுடைய திருமண மண்டபத்தில் ஏழைகள் இலவசமாக திருமணம் நடத்தி கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தார்.

தயாரிப்பாளர் தாணு மீது மானநஷ்ட வழக்கு...லிங்கா விநியோகஸ்தர் அறிவிப்பு!

இந்த 6 வருட காலத்தில் அந்த கிராமத்திற்கு இவர் என்னென்ன உதவிகள் செய்துள்ளார் என்பதையும், எத்தனை ஏழை ஜோடிகளுக்கு அங்கு இலவச திருமணம் நடத்தி கொள்ள அனுமதி அளித்தார் என்பதையும் தெரிவித்தால் நான் சந்தோஷப்படுவேன்.

தலைவலியும் நோவும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள், ஆளவந்தான் படத்தில் இழப்பு ஏற்பட்டபோது ‘ ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான்’ என்று இவர் பேட்டி கொடுத்ததைப் போல லிங்காவில் இழப்பு ஏற்பட்டதற்கு மீடியாவின் துணையை நாங்கள் நாடுவது உங்களுக்கு ஏன் வருத்தத்தை தருகிறது. லிங்கா பிரச்னையில் திருப்பூர் சுப்ரமணி ஈடுபட்டிருக்கும் நிலையில் அவருக்கும் எங்களுக்கும் நடந்து வரும் பிரச்னையில் தாணு தலையிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்போது மீண்டும் இந்த பிரச்னையில் தாணு மீது மான நஷ்ட வழக்கு போடவிருப்பதாகவும், அதேபோல் இதுவரை கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பனிரெண்டரை கோடி இல்லாமல் மேலும் பதினைந்துகோடி நட்ட ஈடாகக் கொடுக்க வேண்டுமென்றும் அவ்வாறு தராவிட்டால் ரஜினி வீட்டு முன்பு போராடப்போவதாகவும் சொல்லியிருக்கிறார்.

வேந்தர் மூவிஸுக்கு ஒரு படம் ரஜினி நடித்துத்தருவார் என்று சொன்ன திருப்பூர்சுப்பிரமணி இப்போது அப்படிச் சொல்லவே இல்லை என்று சொல்லியிருக்கிறார். சொல்லிவிட்டு இப்போது இல்லை என்று அவர் சொல்கிறார் என்றும் விநியோகஸ்தர் சிங்காரவேலன் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு