Published:Updated:

பாங்காக்கில் த்ரிஷாவும் அஞ்சலியும்.

 பாங்காக்கில் த்ரிஷாவும் அஞ்சலியும்.
பாங்காக்கில் த்ரிஷாவும் அஞ்சலியும்.

பாங்காக்கில் த்ரிஷாவும் அஞ்சலியும்.

 ஜெயம்ரவி நடிப்பில் விரைவில் ரோமியோ ஜூலியட் படம் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து வெளிவரவிருக்கும் படம் என்று அப்பாடக்கர் படத்தைச் சொல்கிறார்கள். அப்பாடக்கர் படத்தின் வசனக்காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டுவிட்டன.

ஒரு பாடல் மட்டும் எடுக்கவேண்டியிருந்ததாம். அதையும் வேகமாக முடித்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தப்பாடலில் இருக்கவேண்டிய அஞ்சலி தேதி தராமல் இழுத்துக்கொண்டிருந்ததால் படப்பிடிப்பு நடக்காமல் இருந்ததாம். இப்போது அஞ்சலி அந்தப்பாடலில் நடிக்கத் தேதிகள் கொடுத்துவிட்டார்.

 பாங்காக்கில் த்ரிஷாவும் அஞ்சலியும்.

அதனால் உடனே திட்டமிட்டு பாடலைப் படம் பிடிக்க வெளிநாடு சென்றுவிட்டார்களாம். அந்தப்பாடலில் அஞ்சலி மட்டுமின்றி இன்னொரு நாயகியான த்ரிஷாவும் இடம்பெறுகிறார் என்று சொல்லப்படுகிறது. அஞ்சலி தேதிகள் கொடுத்த அதேநேரத்தில் த்ரிஷாவும் தேதிகள் கொடுத்துவிட்டதால் சந்தோசமாக பாங்காக் சென்றிருக்கிறதாம் அந்தப்படக்குழு.

அங்கு த்ரிஷா அஞ்சலி அகிய இரண்டு நாயகியரோடும் ஜெயம்ரவி ஆடிப்பாடும் பாடலைப் படம்பிடித்துலிட்டு வந்ததும் போஸ்ட்புரொடக்ஷன் வேலைகளைத் தொடங்கி படத்தை வேகமாகத் தயார் செய்துவிடுவார்களாம். 

அடுத்த கட்டுரைக்கு