Published:Updated:

சமூக ஊடகங்களின் ராஜா, ராணியாக ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா தேர்வு!

மும்பை: சமூக ஊடகங்களின் ராஜாவாக நடிகர் ஷாருக்கானும், ராணியாக நடிகை பிரியங்கா சோப்ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஹிந்தி சினிமாக்களின் செய்திகளை வெளியிட்டு வரும் சமூக ஊடகமான (ஆன்லைன்) 'பாலிவுட் லைப்', 'சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக பேசப்படும் நடிகர், நடிகை யார்?' என வாக்கெடுப்பு ஒன்றை சமீபத்தில் நடந்தது.

சமூக ஊடகங்களின் ராஜா, ராணியாக ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா தேர்வு!

இந்த வாக்கெடுப்பில் இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பின் முடிவுகளின்படி சமூக ஊடகங்களின் ராஜாவாக (King Of Social Media) நடிகர் ஷாருக்கானும், ராணியாக (queen Of Social Media) நடிகை பிரியங்கா சோப்ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ஷாருக்கான் விடுத்துள்ள செய்தியில், ''உலகம் முழுவதிலும் இருந்து பல ரசிகர்கள் எனக்கு அன்பையும், ஆதரவையும் வாரிவழங்கி வருகின்றனர். முன்பெல்லாம், கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளின் மூலமாக என்னை தொடர்பு கொண்டனர். நானும் அதைப்போல நன்றி தெரிவித்தேன்.

தற்போது சமூக ஊடகங்களின் உதவியால் வாழ்க்கை முறை மிகவும் சுலபமாகி விட்டது. இதன்மூலம் என்னை சமூக ஊடகங்களின் ராஜாவாக என்னை தேர்வு செய்த 'பாலிவுட் லைப்' இணையதளத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான பிரியங்கா சோப்ரா, ''நான் எப்போதுமே ஒரு ராணியாக ஆசைப்படுவதுண்டு. இந்த விருது அந்த ஆசையை நிறைவேற்றியுள்ளது. என்னை சமூக ஊடகங்களின் ராணியாக என தேர்வு செய்த அனைத்து ரசிகர், ரசிகைகளுக்கும் நன்றி'' எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு