Published:Updated:

”வருத்தம் தந்த ரஜினி...புதிதாய் காட்டும் கமல்” ரசிகர்கள் கேள்விகளுக்கு த்ரிஷா சுவாரஸ்ய பதில்கள்!

”வருத்தம் தந்த ரஜினி...புதிதாய் காட்டும் கமல்” ரசிகர்கள் கேள்விகளுக்கு த்ரிஷா சுவாரஸ்ய பதில்கள்!
”வருத்தம் தந்த ரஜினி...புதிதாய் காட்டும் கமல்” ரசிகர்கள் கேள்விகளுக்கு த்ரிஷா சுவாரஸ்ய பதில்கள்!

”வருத்தம் தந்த ரஜினி...புதிதாய் காட்டும் கமல்” ரசிகர்கள் கேள்விகளுக்கு த்ரிஷா சுவாரஸ்ய பதில்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

த்ரிஷா தனது ரசிர்களுடன் ட்விட்டரில் நேற்று உரையாடினார். அதில் சில சுவாரஸ்ய கேள்விகளும் பதில்களும் இதோ,

அரண்மனை 2 குறித்த சுவாரஸ்ய தகவல் சொல்லுங்கள்? ஏன் ஹாரர் படத்தை தேர்வு செய்தீர்கள்? சவாலான பாத்திரம் காரணமா அல்லது ட்ரெண்டுக்காகவா?

சவாலான பாத்திரம். மேலும் சுந்தர் சாருடன் பணியாற்ற ஆசை..

நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்புவீர்களா?

கடவுளை அதிகம் நம்புவேன், ஆம் அதிர்ஷ்டத்தை நம்புவதில் பாதிப்பு ஒன்றும் இல்லையே.

மணிரத்னம் , ஷங்கர் இருவருடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்களா அல்லது அவர்களுடன் பணியாற்றாமல் இருப்பது உங்களுக்கு திருப்தியா?

இல்லை. மீண்டும் மீண்டும் அவர்களுடன் பணியாற்ற வேண்டும்.

ஒரு நாளில் எவ்வளவு நேரம் தூங்குவீர்கள்?

5மணி நேரம், விடுமுறை நாட்களில் 12 மணி நேரம்.

சந்தோஷமாகவும், வெற்றிகரமாகவும் வாழ உங்கள் வார்த்தைகள்?

வாழ்க்கையில் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

எது உங்களை அதிகம் கோபப்படுத்தும்?

பொய் சொல்பவர்கள், விலங்குகளை துன்புறுத்துவோர்.

ஏன் செல்வாராகவன் படத்தை நிராகரித்தீர்கள்?

நான் நிராகரிக்கவில்லை, எனக்கு கால்ஷீட் இடித்தது அதுதான் காரணம்.

சமீப காலமாக உங்கள் மனம் கவர்ந்த பாடல் எது?

’லவ் மி லைக் யூ டு’ (50ஷேட்ஸ் ஆஃப் க்ரே)

”வருத்தம் தந்த ரஜினி...புதிதாய் காட்டும் கமல்” ரசிகர்கள் கேள்விகளுக்கு த்ரிஷா சுவாரஸ்ய பதில்கள்!

சச்சினை தவிர்த்து உங்கள் மனம் கவர்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்? தோனி என்னைக் கல்யாணம் செய்து கொள்வீர்களா?

அதற்கு முதலில் நான் உங்கள் மீது காதல் வயப்பட வேண்டும்.

சிவகார்த்திகேயனுடன் நல்ல கதை அமைந்தால் நடிப்பீர்களா?

கண்டிப்பாக நடிப்பேன்

நீங்கள் பயணிக்க ஆசைப்படும் இடம் எது? ஆனால் இதுவரை வாய்ப்பு கிடைக்காத இடம்?

தென் அமெரிக்கா

உங்கள் ரசிகர்களுக்கு ஒரு நல்ல அட்வைஸ்?

நீங்கள் கேட்பதையோ, படிப்பதையோ நம்பாதீர்கள்.

சமைக்க பிடிக்குமா?

நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்

ஹாலிவுட் படத்தில் நடிக்க விருப்பம் உள்ளதா?

லியானார்டோ டி கேப்ரியோவுடன் நடிக்க ஆசை

பாலிவுட் நடிகர்களில் உங்கள் மனம் கவர்ந்த நடிகர்?

சல்மான் கான்

ஸோயாவும், ஸோர்ரோவும் (த்ரிஷாவின் செல்லப் பிராணிகள்) எப்படி இருக்கிறார்கள்? 

என் குழந்தைகள் குறித்து விசாரித்ததற்கு நன்றி..அவர்கள் அருமையாக இருக்கிறார்கள் 

பாகுபலி குறித்து உங்கள் கருத்து?

காத்திருக்க முடியவில்லை. தம்மு(தமன்னா) பார்பி டால்

தமிழ் சினிமாவில் எந்த நடிகருடன் இணைந்து நடிக்காதது குறித்து வருத்தப் படுகிறீர்கள்?

ரஜினி சார்.. ரஜினி சார்.. ரஜினி சார்...

தூங்காவனம் எப்படிப்பட்ட படம்?உங்கள் ரோல்?

சீட்டு நுனிக்கு இழுத்துவரும் த்ரில்லர். இது வரை பார்க்காத ரோலில் நான்.

எதிர்கால திட்டங்கள் என்ன? சினிமா தவிர்த்து?

கல்யாணம், இரு குழந்தைகள், ஒரு விலங்குகள் சரணலாயம், பெண்கள் சார்ந்த படங்கள்

ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தது குறித்து?

அவர் அற்புதமானவர். பெண்கள் எல்லாருக்கும் பெரிய ஊக்குவிப்பு ...

சமந்தா குறித்து சில வார்த்தைகள்?

எனது சின்ன வடிவம் சமந்தா என நினைக்கிறேன்.

இதற்கு சமந்தாவும் ஓ... என்ன ஒரு மரியாதை. என முத்தங்களை பொழிய,

த்ரிஷாவும் இதை பலரும் ஏற்றுக் கொள்வதில்லை என ஸ்மைலிகளில் முத்தங்களை வழங்கிவிட்டு 

அனைவருக்கு நன்றிகளைக் கூறிக்கொண்டு விடைபெற்றார் த்ரிஷா.. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு