Published:Updated:

கொலக்குத்து குறியீடுகள்!

கொலக்குத்து குறியீடுகள்!
கொலக்குத்து குறியீடுகள்!

கொலக்குத்து குறியீடுகள்!

ப்போல்லாம் படம் நல்லாருக்கோ இல்லியோ, அதுல குறியீடு பார்க்கிறதுதான் ட்ரெண்ட். குறியீடுனா டைரக்டர், டான்ஸ் மாஸ்டர் மட்டும்தான் காட்டணுமா... காலம் காலமா நம்ம காஸ்ட்யூம் டிசைனர்ஸ் எவ்வளவு குறியீடு காட்டியிருக்காங்க. வாங்க சில சாம்பிள்ஸ் பாப்போம்.

‘அஞ்சான்’ படத்துல ‘ஏக் தோ தீன் சார்’ பாட்டுல சமந்தா ட்ரவுசர் போட்டு ஆடினதை லைக்கோ லைக்குனு லைக்கி வைரலோ வைரல் ஹிட்டாக்கினோமே, எதுக்குய்யா அந்த காஸ்ட்யூம்னு யோசிச்சோமா? ‘ஏக் தோ தீன் சார்’ எந்த வயசுல மக்களே கத்துக்குவோம்? ட்ரவுசர் போட்டுத் திரியிற வயசுலதானே. இதைவிடவா பாஸ் வேற குறியீடு வேணும்!

கொலக்குத்து குறியீடுகள்!

அடுத்து ‘இரண்டாம் உலகம்’ படத்துல படம் முழுக்கவே ஆர்யா கண்ணாடி போட்டிருப்பார். அதெல்லாம் ஏன்னு நெனைச்சீங்களா? ‘லவ் பண்ண பொண்ணு செத்துப்போயிட்டாலும் அவ உயிரோட இங்கதான் நடமாடிக்கிட்டு இருப்பா, நீதான் ஜூம் போட்டு நல்லா தேடிக் கண்டுபிடிக்கணும்.’ இதுதான் அந்தப் படத்தோட ஒன்லைன் ஸ்டோரியே.அதை சிம்பாலிக்கா சொல்றதுக்குதான் பாஸ் அந்தக் கண்ணாடி, அதுவும் அவ்ளோ பெரிய சைஸ் கண்ணாடி!

‘துப்பாக்கி’ படத்துல நம்ம விஜய் ‘குட்டிப்புலி கூட்டம்’ பாட்டுல சட்டையைக் கழட்டிப்போட்டு பனியனோட என்ட்ரி கொடுத்து ஆடுறதைப் பார்த்திருப்பீங்க. சொந்தம், பந்தம், ஆசை, துக்கம், தூக்கம்னு எல்லாத்தையும் அந்தச் சட்டையை மாதிரி துறந்துவிட்டு வாழ்பவன்தான் ராணுவ வீரன்னு குறியீடா காட்டத்தான் அப்படி ஆடுறார்னு சொல்லியா தெரியணும்? (நம்பியேதான் ஆகணும்)

கொலக்குத்து குறியீடுகள்!

‘தசாவதாரம்’ படத்துல சயின்டிஸ்ட் கேரக்டர்ல கோவிந்தாக வந்து நோய்ப் பரவலைத் தடுக்கும் கமல்ஹாசன் நெத்தியில ப்ளஸ் போட்ட பிளாஸ்திரி போட்டுக்கிட்டு வருவார். உத்துக் கவனிச்சீங்கனாதான் புரியும், அது ஃபர்ஸ்ட் எய்ட் டூல்ஸ் பாக்ஸ்ல இருக்கிற சிம்பள். அதாவது உலக நாடுகள் பிளான் பண்ற பயோவாரைத் தடுக்க முதல் முயற்சியை இப்பவே எடுக்க வேண்டிய நேரம் வந்திருச்சுங்கிறதைத்தான் அப்படி சிம்பாலிக்கா சொல்லியிருக்கார்!

சமீபத்தில் வந்த ‘என்னை அறிந்தால்’, படத்துலகூட ஹீரோ அஜித்குமார் கண்ணுல ப்ளாக் கலர் துணி கட்டிக்கிட்டுதான் ஃப்ளைட்ல என்ட்ரி ஆகிறார். கண்ணாமூச்சி விளையாடவா கறுப்புத்துணி கட்டிட்டு வராரு? இப்பல்லாம் கடல் தாண்டிப் போற ஃப்ளைட்டுகளைவிட காணாமப்போகிற ஃப்ளைட்டுகள்தான் அதிகம். அதுக்கு கண்டனம் தெரிவிச்சு, இனிமே நடக்காம இருக்க அறிவுறுத்தியும்தான் அந்தக் கறுப்புத் துணியோட என்ட்ரியே.

இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குனு கேட்கிறவங்களாம் நம்புங்க. நம்பாம போங்க. ஆனா ‘நம்பிக்கைதான் எல்லாம்’னு பிசிராந்தையார் இல்ல, பிரபு சாரே சொல்லிருக்காரு... அவ்வ்வ்!

- ஜெ.வி.பிரவீன்குமார் -

அடுத்த கட்டுரைக்கு