Published:Updated:

ரஜினி, தனுஷ் ஜோடியாக நடிக்கிறாரா வித்யா பாலன்?

ரஜினி, தனுஷ் ஜோடியாக நடிக்கிறாரா வித்யா பாலன்?
ரஜினி, தனுஷ் ஜோடியாக நடிக்கிறாரா வித்யா பாலன்?

ரஜினி, தனுஷ் ஜோடியாக நடிக்கிறாரா வித்யா பாலன்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

 கோலிவுட் , பாலிவுட் என இருபக்கமும் காட்டுத் தீயாக பரவி வருகிறார் வித்யா பாலன். ரஜினிக்கு ஜோடி அவரது மருமகனுக்கும் ஜோடி என்றால் தீயாக அல்ல , எரிமலையாகவே அல்லவா வெடிக்கும். 

சரி உண்மையாகவே வித்யா பாலன் ரஜினிக்கு ஜோடியா என ரஜினியின் அடுத்த படமாக பா.ரஞ்சித் இயக்கும்  படத்திற்கு நெருங்கிய ஒருவரிடம் கேட்டபோது அப்படியேதும் இல்லை எப்படியெல்லாம் கிளப்பி விடுறாங்க பாருங்க என சிரித்தே விட்டார். 

ரஜினி, தனுஷ் ஜோடியாக நடிக்கிறாரா வித்யா பாலன்?

சரி தனுஷ் படம், என அந்தப் பக்கம் அலசியதில், இருக்கு ஆனா இல்ல மொமெண்ட். ’ஹவைஸடா’ படத்தை இயக்கிய விபு புரி இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் தனுஷ் நடிப்பதாகவும், அதில் தனுஷுக்கு ஹீரோயினாக நடிக்க வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறுகிறார்கள். 

தனுஷ் இப்போது ‘மாரி’ படத்தை முடித்து விட்டு  ’ விஐபி’ படக்குழுவின் அடுத்த படத்தில் பிசியாக நடித்துவருகிறார். பின்னர் பிரபுசாலமன் படம் இடையில் ஒரு இந்திப் படமும் இருக்கிறது ஆனால் அது இந்த படமா என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. இதுதான் இந்த வருட ப்ளான் என்கிறது தனுஷுக்கு நெருங்கிய வட்டாரங்கள். எனினும் வித்யா பாலனுக்கு ஜோடி தனுஷ் நல்லாத்தானே இருக்கும். அப்போ வெயிட்டு கதையா! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு