Published:Updated:

மனைவியை பிரிகிறார் நடிகர் பாலா!

மனைவியை பிரிகிறார் நடிகர் பாலா!
மனைவியை பிரிகிறார் நடிகர் பாலா!

மனைவியை பிரிகிறார் நடிகர் பாலா!

தனது காதல் மனைவி அம்ருதாவை விவாகரத்து செய்யவிருக்கிறார் நடிகர் பாலா. அன்பு படம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகர் பாலா. தொடர்ந்து காதல் கிசு கிசு, சிந்தனை செய், மஞ்சள் வெயில், மற்றும் வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக என தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் பல படங்களில் நடித்த பாலாவுக்கு 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. மலையாள தொலைக்காட்சியின் ’ஐடியா ஸ்டார் சிங்கர்’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாலா அதில் போட்டியாளராக கலந்துகொண்ட அம்ருதாவை காதலித்தார். பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவரின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. பாலா - அம்ருதா இருவருக்கும் இரண்டரை வயதில் அவந்திகா என்ற பெண்குழந்தை 2012ம் ஆண்டு பிறந்தது குறிப்பிடத்தக்கது.

மனைவியை பிரிகிறார் நடிகர் பாலா!

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் கடந்த சில நாட்களாகவே விரிசல் ஏற்பட இப்போது விவாகரத்துவரை சென்றுள்ளது. இதுகுறித்து பாலா கூறுகையில், எங்கள் சொந்த பிரச்னை காரணமாக பிரிகிறோம். இதில் யாரையும் குறை கூற விரும்பவில்லை. மேலும் இது என் சொந்த வாழ்க்கை பிரச்னை என்பதால் எல்லோருக்கு இதை தெரியபடுத்துவதிலும் எனக்கு உடன்பாடில்லை என தெரிவித்துள்ளார் பாலா.

என் குழந்தையை நான் மிகவும் நேசிக்கிறேன் எந்த நிலையிலும் அவளுக்கு நான் என் அன்பை கொடுப்பேன் எனக் கூறியுள்ள பாலா தனது விவாகரத்தை அறிவித்துள்ளார். பல நிகழ்ச்சிகளில் மேட் ஃபார் ஈச் அதராக இருந்த ஜோடியான பாலா- அம்ருதா தற்போது விவாகரத்து பெறுவது மலையாள உலகை பரபரப்பாக்கியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு