Published:Updated:

விஜய் படத்தில் நடிக்க மறுக்கும் பிரகாஷ்ராஜ்?

   விஜய் படத்தில் நடிக்க மறுக்கும் பிரகாஷ்ராஜ்?
விஜய் படத்தில் நடிக்க மறுக்கும் பிரகாஷ்ராஜ்?

விஜய் படத்தில் நடிக்க மறுக்கும் பிரகாஷ்ராஜ்?

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு ஜூன் 26 முதல் தொடங்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கிறதென்றாலும் இந்தப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டியல் இன்னும் முழுமையடையவில்லை என்று சொல்லப்படுகிறது.

   விஜய் படத்தில் நடிக்க மறுக்கும் பிரகாஷ்ராஜ்?

படத்தில் உள்ள முக்கியவேடமொன்றில் நடிக்க பிரகாஷ்ராஜை அணுகியிருக்கிறார்களாம். ஆனால் அவர் இன்னும் இந்தப்படத்தில் நடிப்பது குறித்து உறுதியாகச் சொல்லமுடியாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம், தமிழில் பெரியஇடைவெளி விழுந்துவிட்டது. அதைக்குறைத்தாக வேண்டும் என்பதற்காக, இப்போது ஒரேநேரத்தில் சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்தப்படங்களை ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில் விஜய் படத்தில் நடிக்கக்கேட்டதாகவும் அதனால் விஜய் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கமுடியாமல் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அதேசமயம், பிரகாஷ்ராஜ் நடிக்கவேண்டும் என்று கேட்ட வேடம், படத்தில் முக்கியமான வேடம் என்பதாலும் அதில் நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகர் இருந்தால் பலமாக இருக்கும் என்று படக்குழுவினர் விரும்புகிறார்களாம். அதனால், எப்படியாவது இந்தப்படத்தில் நடிக்க பிரகாஷ்ராஜை ஒப்புக்கொள்ள வைக்கும் முயற்சியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

செய்தியை ஆடியோ வடிவில் கேட்க: 

அடுத்த கட்டுரைக்கு