Published:Updated:

சமூகவலைகளில் நடிகர்களை சீண்டும் ரசிகர்கள்? .. விஷாகா சிங்கை தொடர்ந்து ஸ்வாதி, அபிஷேக் பச்சன்..

சமூகவலைகளில் நடிகர்களை சீண்டும் ரசிகர்கள்? .. விஷாகா சிங்கை தொடர்ந்து ஸ்வாதி, அபிஷேக் பச்சன்..
சமூகவலைகளில் நடிகர்களை சீண்டும் ரசிகர்கள்? .. விஷாகா சிங்கை தொடர்ந்து ஸ்வாதி, அபிஷேக் பச்சன்..

சமூகவலைகளில் நடிகர்களை சீண்டும் ரசிகர்கள்? .. விஷாகா சிங்கை தொடர்ந்து ஸ்வாதி, அபிஷேக் பச்சன்..

ஒரு காலத்தில் நடிகர்களை திரையில் மட்டுமே பார்த்துவந்த ரசிகர்களுக்கு இப்போது நடக்கும் நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள் என சாதாரணமாக சினிமா , பிரபலங்களை காண முடிகிறது. முன்பெல்லாம் இசை வெளியீடு, டீஸர் வெளியீடு என்ற நிகழ்ச்சிகளே கிடையாது என்றே கூறலாம். இது போதாது என நடிகர்கள், இயக்குநர்கள் என அவரவருக்கு தனித்தனி ட்விட்டர், முகநூல் பக்கங்கள் வேறு. லைவ் சேட், தினம் ஒரு அப்டேட் என நடிகர்கள் தங்களது ரசிர்களுடன் நேரடி தொடர்புக்கு மாறிவிட்டனர்.

இதனால் ஒருபக்கம் அவர்களுக்கு விளம்பரம் எனினும் மறுபக்கம் ரசிர்கள் நேரடியாகவே சினிமா பிரபலங்களை சீண்டவும் செய்கின்றனர். சமீபத்தில் விஷாகா சிங் தனது உடல் குறித்து ட்விட்டரில் ஆபாசமான கமெண்ட் கொடுத்த ரசிகரை சரம்மாறியாக கேள்விகளை கேட்டு பதில் ட்வீட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் லைவ் சாட்டிங்கிலும் சிலர் என்ன கேட்கிறோம் என்று தெரியாமல் சில கேள்விகளை கேட்டு சம்மந்தபட்ட நடிகர் , நடிகைகளை மனசங்கடத்திற்கு ஆளாக்கும் போக்கும் அதிகமாகி வருகிறது. த்ரிஷாவின் லைவ் சாட்டில் என்னை கல்யாணம் செய்துகொள்வீர்களா என ஒரு ரசிகர் கேட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலாக, நான் உங்களை முதலில் காதலிக்கவேண்டுமே என ஜாலியான முறையில் பதில் கூறினார் த்ரிஷா.

சமூகவலைகளில் நடிகர்களை சீண்டும் ரசிகர்கள்? .. விஷாகா சிங்கை தொடர்ந்து ஸ்வாதி, அபிஷேக் பச்சன்..

அதேவேளையில் த்ரிஷாவால் வருண்மணியன் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியவில்லை என்பதுதான் உண்மை. எந்த ஒரு நடிகையோ, நடிகரோ ஏன் சாதாரணமான மனிதனுக்கே கூட அவர்களது சொந்த வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது இடையூறான ஒன்றுதான். தற்போது அடுத்தபடியாக நடிகை ஸ்வாதி தனது இன்ஸ்டக்ராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட அவரை ஒரு ரசிகர் ஆண்டி மாதிரி இருக்கீங்க என கிண்டலடிக்க அதற்கு சுவாதி பதில் கமெண்டில் வருத்தெடுத்துவிட்டார். ”ஆம் நான் மீண்டும் காலர்ஸ் 16 சுவாதியாக மாறப்போவதில்லை. யாருக்குமே வயது எந்த நிலையிலும் திரும்புவதில்லை, அங்கிள்” என பதிலடி கொடுத்துள்ளார்.

அதே போல் எதையுமே சற்று ஜாலியாக எடுத்துக்கொள்ளும் அபிஷேக் பச்சனை கொஞ்சம் அதிகமாகவே சீண்டிவிட்டுள்ளார் ஒரு ட்விட்டர் வாசி. அவரை இழுத்து பேசியது பிரச்னையில்லை அவரது மகள் ஆரத்யாவையும் இணைத்து அந்த ரசிகர் ட்விட்டரில் மீம்ஸ் வெளியிட சற்றே கோபமடைத்துள்ளார் அபிஷேக். அபிஷேக் பச்சனின் மகள் ஆரத்யா அவரது அப்பாவின் படங்களை த்ரோனா போல் பார்க்க காத்திருக்கிறேன். என்ற வார்த்தைகளுடன் மீம்ஸ் எனப்படும் போட்டோ கமெண்டை வெளியிட்டுள்ளார். அதற்கு அபிஷேக் ”இப்போது சிறப்பாக எண்ணுகிறீர்களா? உங்களது சேவைக்கு நன்றி”. என ட்வீட் செய்துள்ளார்.

சமூகவலைகளில் நடிகர்களை சீண்டும் ரசிகர்கள்? .. விஷாகா சிங்கை தொடர்ந்து ஸ்வாதி, அபிஷேக் பச்சன்..

அதற்கு அந்த ரசிகரும், ’ஆமாம் நான் உலகின் மிகச் சிறந்தவனாக உணர்கிறேன். என் வாழ்வின் சிறந்த செயலாக உங்கள் படங்களை பார்ப்பதை தவிர்க்க இருக்கிறேன், நன்றி சார்”.என பதில் அளித்துள்ளார் அந்த ட்விட்டர் வாசி. அதற்கு அபிஷேக் பச்சன் , ”நிறுத்த போகிறீர்களா, அப்படியானால் இதுநாள் வரை நீங்கள் என் படங்களை பார்த்துள்ளீர்கள். உங்களது பணத்திற்கு நன்றி”. என அடுத்த ட்வீட்டில் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். அதற்கு, நான் அபிஷேக் பச்சனின் ரசிகன் , ஆனால் அவரது படங்களுக்கு அல்ல” என பதில் ட்வீட் கொடுக்க, அபிஷேக் பச்சன் “நீங்கள் ரசிக்கும் படி படங்கள் கொடுக்கவில்லை எனில், நல்லது. இனி அதற்காக கடினமாக உழைக்கிறேன். ஆனால் என் மகளை இதில் இழுத்தது தவறு என” கூறியுள்ளார்.

இந்நிலையில் தனது தவறை உணர்ந்த அந்த ரசிகர், ”நீங்கள் விரும்பினால் நான் டெலீட் செய்து விடுகிறேன், என்னை மன்னிக்கவும்” எனக் கூறியுள்ளார். இதற்கு காரணம் முன்பெல்லாம் நடிகர்கள் குறித்த படங்களும் செய்திகளும் மட்டுமே ரசிகர்கள் கைகளில் கிடைக்கும். ஆனால் இன்றைய நிலையே வேறு அவரவர் அவர்களுக்கு பிடித்த நடிகர்களோடு சமூக வலைகளில் நேரடித் தொடர்பில் உள்ளனர். எனினும் ரசிகர்கள், நடிகர்களை சினிமாக்காரர்கள் தானே என்று எண்ணும் போக்கு மாறி , அவர்களும் நம் போன்ற மனிதர்கள் என்பதை உணர்ந்து அவர்களை சங்கட நிலைக்கு ஆளாக்காமல் இருந்தாலே நல்லது.

செய்தியை ஆடியோ வடிவில் கேட்க:

அடுத்த கட்டுரைக்கு