Published:Updated:

கெளதமியை வீட்டிலேயே பூட்டிவைத்துவிட்டோமே என்று வருந்தும் கமல்ஹாசன்!

கெளதமியை வீட்டிலேயே பூட்டிவைத்துவிட்டோமே என்று வருந்தும் கமல்ஹாசன்!
கெளதமியை வீட்டிலேயே பூட்டிவைத்துவிட்டோமே என்று வருந்தும் கமல்ஹாசன்!

கெளதமியை வீட்டிலேயே பூட்டிவைத்துவிட்டோமே என்று வருந்தும் கமல்ஹாசன்!

கெளதமியை இவ்வளவு நாள் வீட்டில் பூட்டிவைத்துவிட்டோமோ என்று எனக்கே வருத்தமாக இருக்கிறது என்று பாபநாசம் செய்தியாளர் சந்திப்பில் பேசினார் கமல்ஹாசன்.

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் த்ரிஷ்யம். அதன் தமிழ் ரீமேக்கே கமல்ஹாசன், கெளதமி நடிக்கும் பாபநாசம். இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜூத்துஜோசப்பே தமிழிலும் இயக்குகிறார். படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரிதும் பேசப்பட்டது. படம் முடிந்து வெளியாவதற்கு காத்துக்கொண்டிருக்கும் வேளையில் பாபநாசம் படம் பற்றிய சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டார் கமல்ஹாசன்.

கெளதமியை வீட்டிலேயே பூட்டிவைத்துவிட்டோமே என்று வருந்தும் கமல்ஹாசன்!

“இந்தப் படத்தை நான் மட்டுமே செய்ததா சொல்கிறார்கள். ஆனா இந்தப் படம் பல பாத்திரங்களில் செய்த சமையல். ஏற்கெனவே இந்தப் படம் மூன்று மொழிகளில் வெற்றியடைந்த கதை. அந்த கதையை கொண்டுவந்து கொடுத்தார்கள். நாங்க இணைந்து அழகா படத்தை செதுக்கியிருக்கிறோம்.

திருநெல்வேலி பாஷையைத் தேர்வு செய்ய என்ன காரணம்?


பாபநாசம் தமிழ்நாட்டுல நிறைய இடத்துல இருக்கு இதை தேர்ந்தெடுக்கக் காரணம் புதுமையாக இருக்கும் என்பதால் தான். எழுத்தாளர் சுகா தான் திருநெல்வேலி பாஷையை சொல்லிக் குடுத்து டப்பிங் வரைக்கும் உறுதுணையாக இருந்தவர். அதுமட்டுமில்லாமல் திருநெல்வேலி மொழி புது மொழி மற்றும் பொது மொழி அதனால் தேர்வு செய்தோம் என்றார். பாஷை கஷ்டமா இருந்ததா என்றதற்கு, கஷ்டமா இல்லை என்று சொன்னால் ஈஸியா பேசிவிட்டதாக நினைப்பீர்கள். அதானால் அதிகமாக வேலை செய்துதான் கத்துக்கிட்டோம்.

அனுமதியில்லாமல் செல்போன்களில் போட்டோ எடுக்கிறார்களே அதைப் பற்றி உங்கள் கருத்து?

அத்துமீறலான செயல். பல பேர்கள் போட்டோ எடுத்துவிட்டு போட்டோ எடுத்துக்கவா என்று கேட்பது தவறான செயல். மற்றபடி செல்போன் நல்லவிஷயம் தான்.

ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் என்கிறார்களே?

காலில் செருப்பு மாட்டுவது போல வண்டி ஓட்டும் போது தலை பாதுகாப்புக்கு ஹெல்மட் போட வேண்டாமா?  அரசாங்கம் அறிவுரை சொல்லித்தான் இது தெரியணுமா?

பெரிய நடிகர்கள் படத்தில் பெரிய நடிகையைத்தான் நாயகியாக நடிக்க வைப்பார்கள், நீங்கள் கெளதமியை நடிக்க வைக்கக் காரணம்?


என்னைப் பொறுத்த வரைக்கும் அவர் உச்ச நாயகிதான். இந்தப் படத்தில் கெளதமியைப் பார்க்கும் போது இவ்வளவு நாள் அவரை வீட்டில் பூட்டிவைத்துவிட்டோமே என்று எனக்கே வருத்தமாக இருந்தது என்று பேசி முடித்தார் கமல்ஹாசன்.

பாபநாசம் செய்தியாளர் சந்திப்பு வீடியோ:

அடுத்த கட்டுரைக்கு