Published:Updated:

யார் அழகி! ஹன்சிகாவா? நித்யாமேனனா ?

யார் அழகி! ஹன்சிகாவா? நித்யாமேனனா ?
யார் அழகி! ஹன்சிகாவா? நித்யாமேனனா ?

யார் அழகி! ஹன்சிகாவா? நித்யாமேனனா ?

ரஜினி - கமல்ஹாசனுடன் கதாநாயகியாக நடித்த முன்னாள் நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சிந்து நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் உயிரே உயிரே. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

யார் அழகி! ஹன்சிகாவா? நித்யாமேனனா ?

இவ்விழாவில் ஹன்சிகா - நித்யாமேனன் இருவரில் யார் அழகு என்று ஒரு விவாதம் நடந்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. விழாவில் பாடலாசிரியர் விவேகா பேசியபோது, “ இப்படத்தின் எல்லாப் பாடல்களையும் நான் தான் எழுதியிருக்கிறேன். இயக்குநர் படத்தின் கதாநாயகியை வர்ணித்து ஒரு பாடல் வேண்டும் என்று கேட்க, நானும் எழுதினேன்.

அவர் படித்துவிட்டு, நித்யாமேனனுக்கு பாடல் எழுத சொல்லவில்லை. அழகான ஹன்சிகாவுக்கு பாடல் எழுத சொன்னேன் என்றார்,  நானும் இவள் தான் அழகி.. உலகத்தின் மலர்களுக்கு இவள் தான் தலைவி” பாடலை எழுதினேன் என்றார் விவேகா.

விவேகா இவ்வாறு சொன்னவுடன் மேடையிலிருந்த  ஸ்ரீப்ரியா, “ நித்யாமேனன் அழகியில்லை என்று யார் சொன்னது? ஹன்சிகா அழகுதான். அதற்காக நித்யாமேனன் அழகியில்லை என்று கூறாதீர்கள் என்று சொல்லவும் அரங்கமே சிரிப்பில் நிறைந்தது. நிகழ்ச்சியில் நடந்த சுவையான இந்த விவாதத்திற்கு ரசிகர்கள் மட்டுமே பதிலளிக்க முடியும்.

அடுத்த கட்டுரைக்கு