Published:Updated:

பாகுபலி படத்தின் உலக சாதனை!

பாகுபலி படத்தின் உலக சாதனை!
News
பாகுபலி படத்தின் உலக சாதனை!

பாகுபலி படத்தின் உலக சாதனை!

 ராஜமௌலியின் இயக்கத்தில் அனுஷ்கா,பிரபாஸ், தமன்னா, ராணா,ரம்யாகிருஷ்ணன், நாசர், சுதீப், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜூலை 10ம் தேதி வெளியாகவிருக்கும் பிரம்மாண்ட படம் ‘பாகுபலி’ . படத்தின் பாடல்கள், டிரெய்லர் என அனைத்தும் பிரபலங்கள் பலராலும் பாராட்டப்பட்டு ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

இந்தியாவின் அதிக பட்ஜெட் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. தமிழ் ,தெலுங்கு, மற்றும் டப்பிங்கில், இந்தி மற்றும் மலையாளத்தில் வெளியாக உள்ளது. படத்தின் இசை , டீஸர் வெளியீடு என படக்குழு பிரம்மாண்டமாக வெவ்வேறு ஊர்களில் சென்று நடத்தி வருகிறார்கள். 

பாகுபலி படத்தின் உலக சாதனை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில் அடுத்த கட்ட புரமோஷனாக நேற்று கொச்சியில் நடைபெற்ற மலையாள இசை வெளியீட்டு விழாவின் ஒரு அங்கமாக உலகிலேயே மிகப்பெரிய போஸ்டரை மலையாள பாகுபலி படத்தின் இசைவெளியீட்டில் வெளியிட்டுள்ளனர். 

இந்த சாதனையை கின்னஸில் இடம்பெறச் செய்ய படக்குழு முயன்று வருகிறார்கள். கூடியவிரைவில் கின்னஸில் இந்த போஸ்டர் இடம்பெறுமா என்பது இனிதான் தெரியும். இதற்கு முன்பு அக்‌ஷய்குமாரின் ‘பாஸ்’ படத்தின் போது அவரின் ரசிகர்கள் உலகிலேயே மிகப்பெரிய போஸ்டரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.