சினிமாவில் சூப்பர் மேன் வானத்தில் பறக்கிறார். உங்களால பறக்க முடியுமா? சினிமாவைப் பார்த்து ரசிகர்கள் உயிரிழந்துவிடக்கூடாது என்பதற்காக ஹெல்மெட் பற்றியான விழிப்புணர்வை ரசிகர்களுக்கு கூறியுள்ளார் கமல்ஹாசன்.

இருசக்கர வாகனத்தில் போகும் போது ஹெல்மெட் போட்டுகொண்டு போகவேண்டும் என்று நாங்கள் கூறினால் சினிமாவில் நீங்க போடுவதில்லையே என்று எதிர்வாதமாக வைக்கப்படுகிறது. சர்க்கஸ் பார்க்கும் போது பார்ல தொங்குவாங்க. அதுமாதிரி வீட்டு பைப்புகளில் செய்து பார்க்க முடியாது.
அதுமாதிரி சினிமாவில் நடிப்பவர்களுக்கு அருகில் எத்தனை பேர் பாதுகாப்புக்கு நிற்கிறார்கள் என்று உங்களுக்கு படத்தில் தெரியாது. ஆனால் அந்த பாதுகாப்புடன் தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அதையெல்லாம் பார்த்துவிட்டு நீங்கள் பாதுகாப்பில்லாமல், தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் பைக் ஓட்ட வேண்டாம். சினிமாவில் சூப்பர் மேன் பறக்குறார். உங்களால முடியுமா? அதுமாதிரி தான் இதுவும். தயவு செய்து ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டுங்க. உங்க உயிரை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.