Published:Updated:

நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்ட ரஜினி...ஆச்சர்யத்தில் படக்குழு!

விகடன் விமர்சனக்குழு
நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்ட ரஜினி...ஆச்சர்யத்தில் படக்குழு!
நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்ட ரஜினி...ஆச்சர்யத்தில் படக்குழு!

’லிங்கா’ படத்தையடுத்து ரஜினி அடுத்ததாக ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பது நாமறிந்ததே. தமிழ் சினிமாவின் டாப் நடிகர், சூப்பர் ஸ்டார் என பல பட்டங்களை பெற்ற பிறகும் கூட இரு படங்கள் கொடுத்தஇளம் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க சம்மதித்ததிலேயே கோலிவுட் அதிர்ச்சியில் இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் துவங்கப்பட உள்ளது. ரஜினியை படப்பிடிப்புக்கு நேராக வந்தால் போதும் என ரஞ்சித் கூறிவிட்டார். மேலும் மற்ற நடிகர்களுக்கு பிரத்யேக ஒத்திகை நடத்திவருகிறார். இவரின் முந்தைய படங்களான ‘அட்டக்கத்தி’, ‘ மற்றும் ‘மெட்ராஸ்’ படங்களுக்கே ரஞ்சித் படப்பிடிப்புக்கு முன்னர் நடிப்புக்கான ஒத்திகை எடுத்துக்கொண்டுதான் படப்பிடிப்பை துவக்கியுள்ளார். 

நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்ட ரஜினி...ஆச்சர்யத்தில் படக்குழு!

இப்போது ரஜினி படம்  என்பதால் பொறுப்புகள் இன்னும் அதிகம் என்பதால் மற்ற நடிகர்களுக்கு நடிப்பு ஒத்திகை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வளவு பெரிய நடிகராக வளர்ந்துவிட்ட நிலையிலும் கூட ரஜினி படக்குழுவின் ஒத்திகை நடக்கும் இடத்திற்கு வருகை புரிந்து ஆச்சர்யம் கொடுத்துள்ளார். 

அதுமட்டுமின்றி இவரது சீன்களுக்கான சில ஒத்திகைகளிலும் பங்கு எடுத்துக் கொண்டுள்ளார். இதனைக்கண்டு ரஞ்சித் உட்பட அனைவரும் பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.இவ்வளவு பெரிய நடிகர் இத்தனை புகழுக்கு பிறகும் கூட இவ்வளவு எளிமையாக புதிதாக நடிப்பு பயிலும் நடிகர் போல் ஆர்வமாக கலந்து கொண்டுள்ளாரே என படக்குழு ரஜினியை பாராட்டி வருகிறார்கள். கலைப்புலி தாணு தயாரிக்க உள்ள இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்.