Published:Updated:

'புலி’ இசைவெளியீடு தேதி அறிவிப்பு?

விகடன் விமர்சனக்குழு
'புலி’ இசைவெளியீடு தேதி அறிவிப்பு?
'புலி’ இசைவெளியீடு தேதி அறிவிப்பு?

 சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘புலி’ படத்தின் படப்பிடிப்புகள் யாவும் முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகின்றன. 

தேவி ஸ்ரீபிரசாத் இசையில் படத்தின் டிஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதுவரை படத்தின் டீஸரை மட்டும் 48 லட்சத்துக்கும் மேலானோர் கண்டிகளித்துள்ளனர். அடுத்ததாக படத்தின் இசை எப்போது என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. 

'புலி’ இசைவெளியீடு தேதி அறிவிப்பு?

ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி படத்தின் இசை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் விநாயகர் சதுர்த்தி தினத்தில் ரிலீஸ் ஆகும் என முன்பே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.