Published:Updated:

அபிஷேக் பச்சனும், அசினும் மெண்டல்

விகடன் விமர்சனக்குழு
அபிஷேக் பச்சனும், அசினும் மெண்டல்
அபிஷேக் பச்சனும், அசினும் மெண்டல்

உமேஷ் ஷுக்லா இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ரிஷி கபூர், அசின், சுப்ரியா பதக் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆல் ஈஸ் வெல்’. படத்திற்கு இசை மட்டும் 4 பேர். ஹிமேஷ் ரேஷ்மயா, அமால் மாலிக், மீட் ப்ரோஸ் அஞ்சான், மிதூன். 

அபிஷேக் பச்சனும் அசினும் ஹீரோ, ஹீரோயின், ரிஷி கபூரும், சுப்ரியா பதக்கும், அபிஷேக் பச்சனுக்கு அப்பாவாக நடிக்கிறார்கள். படத்தின் கதைப்படி அந்தக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.  அபிஷேக் பச்சன் அப்பாவை மதிக்காதவர், எப்போதும் சண்டை சச்சரவான குடும்பமாக இருக்கும்  இவர்கள் ஒரு ஜீப்பில் பயணம் போகிறார்கள்.

அபிஷேக் பச்சனும், அசினும் மெண்டல்

அந்தப் பயணத்தில் ஏற்படும் வித்யாசமான சம்பவங்கள் நால்வரையும் இணைக்கிறது. ஒருவரை ஒருவர் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக் கதையாம். இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. டிரெய்லரில் ஓரிடத்தில் ‘மீட் த மெண்டல் ஃபேமிலி’ என்கிற வாசகம் வருகிறது. எனவே படத்தில் தனக்கென ஒரு கொள்கை வைத்துக் கொண்டு கேனத்தனமாக நடப்பது போன்று ஒவ்வொரு கேரக்டரும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

பாலிவுட் ‘கஜினி’ மூலம் நடிக்க சென்று, அங்கேயே செட்டில் ஆகிவிட்ட அசின், தொடர்ந்து சல்மான் கான், அக்‌ஷய் குமார் என நடித்தவர் இடையில்  2012ம் ஆண்டில் வெளியான ‘கில்லாடி 786’ படத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இரண்டு வருடம் கழித்து மீண்டும்  இந்தப் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.