Published:Updated:

விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் இயக்குநர் மகேந்திரன்?

விகடன் விமர்சனக்குழு
விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் இயக்குநர் மகேந்திரன்?
விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் இயக்குநர் மகேந்திரன்?

 அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூலை ஒன்றாம்தேதி தொடங்கிவிட்டது. முதலில் ஒரு பாடல்காட்சியைப் படமாக்கிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப்படத்தில் இயக்குநர் மகேந்திரன் ஒரு முக்கியவேடத்தில் நடிக்கிறார்.

படத்தில் விஜய்க்கு இணையாக அவருடைய பாத்திரப்படைப்பு இருக்குமென்று சொல்லப்படுகிறது. மகேந்திரன், இயக்கும்போது நடிகர்களுக்கு நன்றாக நடிப்புச் சொல்லித்தருவார், அதைப் பற்றிக் கேள்விப்பட்டுத்தான் இந்தவேடத்துக்கு மகேந்திரன் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் அட்லி தேர்வு செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் இயக்குநர் மகேந்திரன்?

அப்படி என்ன வேடம்? படத்தில் அவர்தான் வில்லன் என்கிறார்கள். விஜய் போன்ற ஒரு சக்திமிக்க நாயகனுக்கு வில்லன் என்று வரும்போது அதுவும் பேசப்படும் வேடமாகத்தான் இருக்கும், இந்தப்படத்தில் மகேந்திரன் நடிப்பதன் மூலம் படம் வெளியானதும் அந்தவேடம் மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் என்று சொல்கிறார்கள்.

இந்தப்படம் ஏற்கெனவே தமிழில் வந்த ஒருபடத்தைத் தழுவி எடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்திலும் மலையாளநடிகர் ஒருவர் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அந்தப்படம் வெளியானபோதும் அந்தப்பட நாயகனைவிட வில்லன்வேடம் பற்றி அதிகமாகப் பேச்சு இருந்தது. இந்தப்படத்திலும் அதுபோலவே நடக்கலாம் என்றும் பேச்சு இருக்கிறது.