Published:Updated:

நேனு வஸ்தானு ! : கோபிசந்த்

விகடன் விமர்சனக்குழு

தமிழில் 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் ரவி, கோபிசந்த், சதா மற்றும் இயக்குனர் ராஜா. நாயகனாக ரவி, நாயகியாக சதா, வில்லனாக கோபிசந்த் நடிக்க 'ஜெயம்' படத்தினை இயக்கினார் ராஜா.

'ஜெயம்' திரைப்படம் வரவேற்பை பெற்றதை அடுத்து தனது பெயரை 'ஜெயம் ரவி' என்று அடையாளப்படுத்து கொண்டார். கோபிசந்த் தமிழில் 'ஜெயம்' படத்தினை முடித்தவுடன் தெலுங்கில் தனது திறமையை வெளிப்படுத்தி அங்கு முன்னணி நாயகனாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் தமிழில் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார் கோபிசந்த். இப்படத்தினை இயக்க இருக்கிறார் இயக்குனர் பூபதி பாண்டியன். 'தேவதையை கண்டேன்', 'மலைக்கோட்டை' என தமிழில் பல வரவேற்பை பெற்ற படங்களை இயக்கியர் பூபதி பாண்டியன்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகள் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறார்கள். தெலுங்கில் ஏற்கனவே நாயகனாக காலூன்றி இருந்தாலும், தமிழ் திரையுலகிலும் முன்னணி நாயகனாக வலம் வர வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறார் கோபிசந்த்.