Published:Updated:

கமல் பற்றி ராதாரவி அவதூறாக பேசியதை விரைவில் வெளியிடுவேன்: விஷால் ஆவேசம்!

கமல் பற்றி ராதாரவி அவதூறாக பேசியதை விரைவில் வெளியிடுவேன்: விஷால் ஆவேசம்!
கமல் பற்றி ராதாரவி அவதூறாக பேசியதை விரைவில் வெளியிடுவேன்: விஷால் ஆவேசம்!

கமல் பற்றி ராதாரவி அவதூறாக பேசியதை விரைவில் வெளியிடுவேன்: விஷால் ஆவேசம்!

திருச்சி: நடிகர் கமலஹாசனை ராதாரவி அவதூறாக பேசி ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை விரைவில் வெளியிடுவேன் என்று ஆவேசமாக நடிகர் விஷால் தெரிவித்தார்.

கமல் பற்றி ராதாரவி அவதூறாக பேசியதை விரைவில் வெளியிடுவேன்: விஷால் ஆவேசம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நிலவி வரும் முறைகேடுகள், பிரச்னைகள் குறித்து நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நேற்று கூட்டத்தை முடித்து கொண்டு மாலை திருச்சி வந்திருந்தனர்.

திருச்சி தேவர் ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி, மணப்பாறை, புதுக்கோட்டை, தஞ்சை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த நாடக நடிகர் சங்க உறுப்பினர்களை நடிகர் விஷால் தலைமையில் நடிகர்கள் நாசர், கருணாஸ், பொன்வண்ணன், சரவணன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

கமல் பற்றி ராதாரவி அவதூறாக பேசியதை விரைவில் வெளியிடுவேன்: விஷால் ஆவேசம்!

அப்போது, அந்த கூட்டத்தில் நடிகர் விஷால் பேசும்போது, ''தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது. அதையெல்லாம் நாங்கள் கேட்டதற்கு எங்களை மிகவும் கீழ்தரமாக திட்டுகிறார் சங்க பொது செயலாளர் ராதாரவி. சங்கத்துக்காக புதிய கட்டடம் கட்டுவதில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதையெல்லாம் தட்டிக் கேட்டால் தென்னிந்திய நடிகர் சங்கத்தைச் சீர்குலைப்பதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர். கூடவே எங்களை நாடக நடிகர்களுக்கு எதிரானவர்களாக சித்திரிக்கின்றனர்.

நாடக நடிகர்கள் இல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கம் இல்லை. அவர்களை இதுநாள் வரை வெறும் ஓட்டுக்காக பயன்படுத்தி வந்தனர். நாடக நடிகர்களின் வாழ்க்கையின் துயரங்களை துடைக்கவில்லை. இதையெல்லாம் விளக்கி, நடந்த உண்மைகளை உங்களுக்கு தெரிவிக்கவே மாவட்டம் தோறும் சென்று நடிகர் சங்க உறுப்பினர்களை சந்தித்து வருகிறோம். அவர்கள் நம்மை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சித்து வரலாம், கவலையில்லை. ஆனால், நான் உங்களுக்கு உண்மையுள்ளவனாக இருப்பேன்.

கமல் பற்றி ராதாரவி அவதூறாக பேசியதை விரைவில் வெளியிடுவேன்: விஷால் ஆவேசம்!

நடிகர் கமல்ஹாசனை, சங்கத்தின் பொதுசெயலாளர் ராதாரவி அவதூறாக பேசியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நிச்சயம் விரைவில் வெளியிடுவேன் என்ற விஷால், நான் இங்கு வாக்கு கேட்டுவரவில்லை. ஆனால், நடப்பவை எல்லாம் நமக்கு எதிராகவே உள்ளன என்பதை விளக்க வந்திருக்கிறேன். அடுத்த முறை தேர்தல் தேதி அறிவித்த பிறகு வாக்கு கேட்டுவருவேன்.

நமக்கு தேவை மாற்றம். கூடிய விரைவில் தமிழக முதல்வரைச் சந்தித்து, மூத்த உறுப்பினர் என்ற முறையில் அவரை தேர்தலில் வாக்களிக்க கோரிக்கை வைப்போம். நடிகர் சங்கப் பிரச்னை குறித்தும் அவரிடம் எடுத்துரைப்போம்.

கமல் பற்றி ராதாரவி அவதூறாக பேசியதை விரைவில் வெளியிடுவேன்: விஷால் ஆவேசம்!

கடந்த காலங்களில் நடந்த நடிகர் சங்க தேர்தல்களில் தபால் வாக்குகள் பதிவு செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. எனவே, முறையான நியாயமான தேர்தல் நடக்க அனைவரையும் நேரடியாக வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த அணியை எதிர்த்து, இளைஞர்களான தனுஷ், சிம்பு தேர்தலில் போட்டியிடுகின்றார்களாமே என்ற கேள்விக்கு, இதே கேள்வியை தனுஷ் இடம் கேட்டுபாருங்கள். பதில் சொல்வார்.

நடிகர் சங்கத்திற்காக, நடிகர் ஜே.கே.ரித்தீஷ் 10 லட்ச ரூபாய் கொடுத்ததாக சொல்கிறார். ஆனால், அது கணக்கில் இல்லை. இப்படி, எத்தனையோ பேர் கொடுத்த நன்கொடைகள் எல்லாம் கணக்கில் காட்டப்படவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணி, வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் சங்கத்தில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்" என்றார்.

சி.ஆனந்தகுமார்

படங்கள்:
என்.ஜி.மணிகண்டன்

அடுத்த கட்டுரைக்கு