Published:Updated:

சூடு பிடிக்கிறது நடிகர் சங்க தேர்தல், விஷால், ஆர்யாவுக்கு எதிராக சிம்பு தனுஷ்?

 நடிகர் சங்கத் தேர்தல் ஜூலை 15ம் தேதி நடக்கவிருந்து இப்போது கோர்டில் வழக்கு போடப்பட்டதன் காரணமாக இன்னும் சரியான தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது. எனினும் நடிகர்கள், தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 

விஷால், ஆர்யா, கார்த்தி என ஒரு பக்கம் இளைஞர்கள் படையாக தேர்தலில் போட்டியிட இருக்கும் நிலையில், சரத்குமார் இவர்களை சமாளிக்க சிம்பு , தனுஷை களம் இறக்க இருப்பதாகக் கூறப்பட்டுகிறது. இதை நிரூப்பிக்கும் பொருட்டு தனுஷ் தனது படங்களின் நிகழ்ச்சிகளில் கூட சரத்குமாருடன் காணப்படுகிறார்.

சூடு பிடிக்கிறது நடிகர் சங்க தேர்தல், விஷால், ஆர்யாவுக்கு எதிராக சிம்பு தனுஷ்?

மேலும் அவரது பிறந்தநாளுக்கு சிம்பு, தனுஷ் ஆகியோர் வாழ்த்துகளை பரிமாறியதும் குறிப்பிடத்தக்கது. தனது படங்களிலும் ராதிகா சரத்குமார், மற்றும் அவரது தயாரிப்பு என தனுஷ் , சரத்குமார் டீம் இணைந்தே உள்ளனர்.மேலும் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெருந்தலைகள் யார் பக்கம் என்பது இன்னமும் ரகசியமாகவே இருக்கிறது. 

இந்நிலையில் நேற்று நாமக்கல்லில்நேற்று விஷால் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு விழாவில் கலந்து கொண்டார்.இதில் பேசிய இவர் நடிகர் ’தனுஷ், சிம்பு போன்றோர் தேர்தலில் போட்டி யிடுவதை வரவேற்கிறோம் எனக் கூறியுள்ளார். சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம்’ என்று கூறியுள்ளார்.முதல்வரையே சந்திக்க முடிவு செய்துள்ள விஷால் தரப்பால் சினிமா உலகில் கொஞ்சம் பரபரப்பாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு